ஏக்கம்

97 12 3
                                    

யாரோ இருமும் சத்தம் கேட்டு திரும்பினாள்.🤔

"டேய் நல்லவனே இங்க என்னடா பண்ற"- நிஷா

"கீர்த்தி miss நா இல்லாம கவல பட்டங்களாமே அதான் company கொடுக்க வந்தேன்😁" - அகீ

"ஒன்னு விட்டனா பாரு ஒழுங்கா சொல்லுடா ஏன்டா வந்த ?"- நிஷா

"கட்டாயம் சொல்லனுமா ?"- அகீ.

"கெஞ்சி கேக்றேன் சொல்லுங்க தம்பி"- நிஷா

"இப்ப சொல்றேன்...😜
சதிஷோட அண்ணன் தான் cheif guest அவனுக்கு ஏதோ வேல இருக்குனு என்ன அண்ணனோட போக சொன்னான்."- அகீ

"ஒனக்கு மட்டும் ஏன்டா இப்டி luck அடிக்குது"என நிஷா கூற அகீ கொலரை உயர்த்திக்கொண்டான்😎.

நீல நிற shirt இல் அகீயும் ஆண்அழகனாகவே இருந்தான்😍.

"சரிடா வா உள்ள போலாம்" என நிஷா கூற இருவரும் உள்ளே சென்றனர்.

உள்ளே சென்ற பின் நிஷாவின் கையை பற்றிய அகீ அவளை இழுத்து சென்றான்🤨.

"ஏன்டா இழுத்துட்டு போற நிறுத்து டா"- நிஷா

"பேசாம வாக்கா" என இழுத்து சென்றவன் ஒரு ஆடவனின் முன் சென்று நிறுத்தினான்🤔.

"அக்கா இவர் தான் நா சொன்ன சதிஷோட அண்ணன் ஆதித்யா😍. aadhira group of company யோட ஆணிவேர் எங்க அண்ணா தான்...

ஆதி அண்ணா இவ தான் என்னோட ஒரே அக்கா நிஷா இந்த school , science teacher"- அகீ

"hello😊"- நிஷா

"hello...😊நீங்க தானே வெளிய இருந்தீங்க..
Nice to meet you"- என்று ஒரு புன்னகையுடன் கூறிவிட்டு தன் phone இனை நோண்ட ஆரம்பித்தான்.

இதனை கவனித்த நிஷா அகீயின் காதருகே சென்று " என்னடா இவன் கண்டுக்காம phone நோண்ட்றான்."என்றாள்

"அவர் அப்டி தான்கா girls கூட அவ்ளோ பேச மாட்டார்"- அகீ

"ஓ.......😐சரிடா நீ இங்க உக்காரு நா போறேன்"- நிஷா

"சரிக்கா"- என்றவன் ஆதியின் அருகே உக்காந்தான்.

ரேஷ்மா அருகில் சென்று அமர்ந்தவளின் மனது ஆதியையே சுற்றி சுற்றி வந்தது.

"ஆம்பளனா இவரு போல தான் இருக்கனும் எவளோ மரியாதயா நடந்துக்கிட்டார்.என்ன கண்டுக்கவே இல்ல"
என நினைத்தவளின் மனதில் சிறு கவலை உண்டானது என்னவோ உண்மை தான்😥....

விழா துவங்கி ஒவ்வொரு நிகழ்வும் மிக அழகாக நடை பெற்றுக்கொண்டு இருந்தது😍.

"அடுத்து தரம் ஒன்று மாணவர்களின் நடன நிகழ்வு நடைபெறபோகிறது"- என அறிவிக்கப்பட்ட பின் மின்மினி பூச்சி உடையில் சிறுவர்கள் மேடை ஏறினர்❤️.

அவர்களின் அழகிய நடனம் அனைவரின் மனதையும் காந்தம் போல் ஈர்த்தது😍.

திடீரென நிலை தடுமாறிய சிறுமி ஒருத்தி மேடையின் கீழே இருந்த கண்ணாடி அலங்காரத்தின் மேல் விழப்போனது...😰😨

(தொடரும்..)

மீண்டு(ம்) வருவாயா?Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ