அறிமுகம்

97 15 3
                                    

நிஷா...😍
23 வயதான அழகுபதுமை ஆசிரியையாக கடமை புரிகிறாள்.
அழகிற்கு  ஏத்த குணம் அவளிடம் உண்டு.
எல்லாரையும் மதிப்பாள்.🤗
தாய் தந்தை என்றால் அவளுக்கு உயிர்.
காதல் மேல் நம்பிக்கை இல்லாதவள். காதல் என்று எவனும் வந்தால் மீண்டும் அவளிடம் வராத அளவிற்கு உரை நிகழ்த்தி அனுப்பி விடுவாள்.😮 எல்லா மாணவர்களுடனும் சொந்த அக்கா போல் பழகுவாள்.

தந்தை முத்து குமார்...
A.N company இன் ஆணிவேர் மாதம் 2 இலட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுகிறார்.
தன் இரு பிள்ளைகளையும் நல்ல முறையில் வளர்த்துள்ளார்.😊 எல்லாரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்டவர்.
தன் மனைவியை சீண்டுவதே பொழுதுபோக்காக கொண்டவர்.🤪

தாய் பார்வதி...
நிஷா கடமை புரியும் அதே பாடசாலையின் பழைய ஆசிரியை.
என்ன நடந்தாலும் உடனே கலங்கி விடுவார்.😨
நிஷாவை விட அழகில் உயர்ந்தவர். எவ்வளவு தான் இருந்தாலும் தன் கணவனின் பேச்சிற்கு மறு பேச்சி பேச மாட்டார்.😉
மிகவும் நல்லவர்  

தம்பி அகிலன்...
காலேஜ் 2nd year படிக்கிறான்.
வீட்டில் படு சுட்டி.😁
யாரேனும் உதவி  என்று வந்தால் உடனே உதவும் பழக்கம் கொண்டவன்.
எவ்வளவு பெண்கள் என்று பேசினாலும் இதுவரை எந்த பெண்ணிடமும் பேசியதாக சரித்திரமே  இல்லை.😄
தன் அக்காவை   சண்டைக்கு அழைக்கவே அடிக்கடி பெண்கள் என்று பேசுவான்.
மற்றபடி எல்லா பெண்களையும் மதிப்பான்.
காதல் என்று யார் பின்னும் திரிய மாட்டான்.

அக்காவும் தம்பியும் வீட்டில் tom and jerry போன்று இருந்தாலும் வெளியில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கவே மாட்டர்.🤼‍♀️

நிஷா தயாராகி கீழே வந்தாள்...

வெளியே ரேஷ்மாவின் scooty ஒலி கேட்க "  அம்மா வரேன்மா,அப்பா வரேன்பா,டேய் வரேன்டா" என தாய் தந்தையை முத்தமிட்டு சென்றாள்.😍

"Ok... சீக்கரம் போ உன் ஆருயிர் தோழி போயிட போறாள்"-  அகீ

"போடா..." - என தன் தம்பியிற்கு செல்லமாக கொட்டிவிட்டு தன் நண்பி ரேஷ்மா உடன் பாடசாலைக்கு சென்றாள்.😁

அங்கே நிஷாவும் ரேஷ்மாவும் பிரியாவை சந்தித்தனர் 

நிஷா,ரேஷ்மா,பிரியா மூவரும் இணைபிரியா தோழிகள் காலேஜ் காலம் முதல் இன்று வரை நட்பின் இலக்கணமாக இருப்பவர்கள்.

ரேஷ்மா...
தைரியம் அதிகம் கொண்டவள்.
வாய் திறந்தாள் மூடவே மாட்டாள்.
உடனே அனைவரையும் நம்பும் மனம் கொண்டவள்.😊
வீட்டிற்கு ஒரே பிள்ளை.
அதனால் செல்லம் கொஞ்சம் அதிகம்

பிரியா...
பிடிவாதகாரி ஒரு காரியத்தை எடுத்தால் முடிக்காமல் விட மாட்டாள்.
எல்லாரையும் பேச்சால் மயக்கும் திறமை கொண்டவள்.
இரண்டு அண்ணன் ஒரு அக்கா என வீட்டின் கடைக்குட்டி இவள் தான்🙂

படிப்பு,அழகு,குணம் மூன்றிலுமே நண்பிகள் மூவரம் ஒருவரை ஒருவர் சலித்தவர்கள் அல்லர்.😉
எந்த நிலைமையிலும் ஒருவரை ஒருவர் விட்டு கொடுக்க மாட்டர்.

பரிசளிப்பு விழா நடக்க இருக்க மூவரும் விழா அறைக்கு சென்று மாணவர் அலங்கரிப்பதை பார்த்துக்கொண்டும் தன்னால் முடிந்த உதவியை செய்து கொண்டும் இருக்க

நிஷா தன்னை யாரோ உற்றுநோக்குவதை உணர்ந்து திரும்பி பார்த்தாள் அங்கே....😨

(தொடரும்..)

மீண்டு(ம்) வருவாயா?Donde viven las historias. Descúbrelo ahora