சுயத்தை தொலைக்கிறேன் உன்னில்...

728 46 2
                                    

அடுத்த நாள் அவள் கேட்டது போலவே அவனும் அவளைக் காண்பது மட்டுமல்லாது அவள் திசை பக்கமே திரும்பாமல் இருந்தான்.

எங்கே அவளை கண்டுவிட்டால் மனம் அவளிடமே சுழன்றிடுமோ என்ற அச்சம் அவனிடத்தில். ஸ்மிதாவின் மனமோ ஒருபுறம்  அவனிடம் முன்தினம் உறுதியாக கூறினாலும் மறுபுறம் அவனது பார்வைச் சந்திப்பை நினைத்து ஏங்கியவளாய் இருந்தாள்.

எத்தனை முயற்சி செய்தாலும் சிறிது நேரத்தில் அவன் தன் கட்டுப்பாட்டை இழக்கத் தொடங்கினான். இருப்பினும் அவள் வேண்டுகோள் நினைவில் வர யாருமறியாமல் அவள் முகத்தில்  தோன்றும் உணர்ச்சிகளை கண்டு ரசித்தான்.

இந்த இருவரின் மன போராட்டங்களை ஆர்த்தி காண தவறவில்லை. சிந்தனையோடு அவ்விடம் விட்டு சென்றாள். அன்றைய தினம் முழுதும் இவ்வாறு ஓடி விட இரவு நேர உரையாடலுக்காக ருவரும் காத்திருந்தனர்.

ஸ்மிதாவின் தவிப்பை கண்ட ஆர்த்தி கவனிக்காதது போல் உறங்கச் சென்று விட்டாள்.

கைப்பேசியையே பார்த்துக் கொண்டிருந்தவள் அழைப்பு சத்தம் கேட்டவுடன் எடுத்து காதுக்கு கொடுத்தாள்.

" ஹலோ.. கோவம் குறைஞ்சுடுச்சா.." என்று மெல்லிய குரலில் கேட்டாள்.

" அதெப்டி போகும். என்ன நினைச்சுகிட்டிருக்க நீ. போய் நாலஞ்சு நாளாச்சு. ஒரு phone இல்ல. அவ்ளோ தான் அக்கறையா எங்க மேல " என தாய் சுதா கோபத்துடன் முடிக்க, அப்போதுதான் தன் கைபேசி திரையை கவனித்தாள்.

தலையில் லேசாக தன்னை தானே கொட்டியபடி ,
"Sorry மா.... நா call பண்ணலாம்னு தான் இருந்தேன் இங்க வேலைல மறந்துட்டேன் உங்க செல்ல பிள்ளைய மன்னிச்சிடுங்க " என்று கெஞ்சினாள்.

" அது சரி  அங்க நல்லா அரட்டை அடிச்சிட்டு என்கிட்டயே பொய் சொல்றியா.. சாப்பாடெல்லாம் நேரத்துக்கு சாப்பிடுரியா இல்லையா.. புது இடம். ஜலதோஷம் ஒன்னும் இல்லையே" என்று கேள்விகளை அடுக்கினார் மகளிடம்.

" எல்லாமே super ஆ set ஆகிடுச்சு. நீ கவலையே படாதே. உன் பொண்ணு இங்க பக்காவா இருக்கேன்"

தாயிடமிருந்து கைபேசியை வாங்கிய தந்தையோ,
" ஏண்டா ஒரு call கூட செய்யல அதுக்குள்ள எங்கள மறந்துட்டியா" என்றதும்,

ஸ்மிதாவின் மனம் குற்ற உணர்ச்சியால் தடுமாறியது. இருப்பினும் சமாளித்தவளாய்,

"ப்பா.. அப்படியெல்லாம் இல்லப்பா இங்க கொஞ்சம் தொடர்ச்சியா classes அதான்.. " என்றவாறு இவர்கள் மூவரின் உரையாடல் நீண்டது.

ஹரிஷோ அவளது கைப்பேசிக்கு அழைத்து அழைத்து சோர்ந்து போனான். மீண்டும் அவள் நினைவுகளையே துணையாய்க் கொண்டு உறங்கினான். கனவிலும் அவள் தோன்றி இம்சை செய்ய சிரமப்பட்டு இரவைக் கழித்தான்.

பெற்றோருடன் பேசியவள் மனமோ ஒருபுறம் குற்ற உணர்ச்சியில் தவிக்க மறுபுறம் அவனது தொடர் அழைப்பில் உருகிய மனதை கஷ்டப்பட்டு அடக்கினாள். இறுதியில் அவனிடம் மீண்டும் பேசி சமாதானம் ஆகிவிட முடிவெடுத்தாள்.

அடுத்த நாள் அவனைக் கண்டதும் இதயம் சந்தோஷக் கும்மாளமிட தனித்திருந்தவனிடம் புத்தகத்தோடு ,

" ஹரி என் மேல இன்னும் கோவமா இருக்கியா.Sorry.. ஒரு சின்ன விஷயத்தை ரொம்ப போட்டு குழப்பிட்டேன்.I cannot lose you for such things" என்று முடித்தாள்.

அவள் பார்வையிலும் வார்த்தைகளிலும்
தன்  கோபத்தை இழந்தவன் விழிகளில் காதலை ஏந்தினான். பின் சுற்றுப்புறம் உணர்ந்து அவள் புத்தகங்களோடு யாரும் அறியா வண்ணம் விரல்களையும் தீண்டி புத்தகத்தை பார்த்தவாறே,

" எனக்கு கூட கோவப் படனும்னு ஆசைதான். ஆனா உன்ன மட்டும் ஏனோ என் மனசு சீக்கிரமா மன்னிச்சுடுது.very bad. வர வர என் மேல உனக்கு இருக்கிற Effect கூடிக்கிட்டே இருக்கு " என்றான்.

அவன் சிறு தீண்டுதலிலும் பார்வைகளிலும் உடல் ஸ்தம்பிக்க வார்த்தைகள் நாவோடு ஒட்டிக்கொண்டது அவளிடத்தில். தடுமாறியபடியே புத்தகத்தை கீழே விட்டவள் அதை எடுத்தவாறு இதயம் படபடக்க வேகமாக இடம் விட்டு சென்றாள்.

அவள் செய்கையில் தன்னை மறந்து குலுங்கி சிரித்தவன் மற்றவர்களின் வினோத பார்வையில் முகத்தை கஷ்டப்பட்டு எதார்த்தமாக வைத்துக்கொண்டான்.
புரியாத உணர்வுகளினால் குழம்பியவள் இன்றோடு அவன் வகுப்புகள் முடிய கிளம்பி விடுவதை எண்ணி சிறு வெறுமையை உணர்ந்தாள்.

நாளை அந்த ஊர் மக்களிடம் ஒரு சின்ன survey இருக்க அதனோடு அவர்கள் ஊருக்கு செல்வதாய் திட்டமிடப்பட்டிருந்தது.
அவனது செயல்கள் எதையோ உணர்த்துவது போல் தோன்றியதை வேண்டுமென்றே மனதில் போட்டிப்போட்டு மறுத்தாள் ஸ்மிதா.

_______________________________________

காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)Where stories live. Discover now