விலகி செல்ல துடிக்கிறேன்🚶‍♂️...

707 49 2
                                    

அடுத்த நாளின் விடியலில் இருவரும் அவரவர் வீடுகளை நோக்கிய பயணத்தில் இருந்தனர். ஊட்டிக்குள் நுழைந்த பேருந்து ஒவ்வொரு மாணவியரையும் அவரவர் வீடுகளில் சேர்த்த வண்ணம் இருந்தது. ஸ்மிதாவின் முகத்தில் வெளிப்படையாய் தெரிந்த வெறுமையை ஆர்த்தி காண தவறவில்லை.

இருப்பினும் , அவளை கேள்விகளால் மேலும் காயப்படுத்த எண்ணாமல் சிறிது நேரம் செல்ல காத்திருந்தாள். இப்படியாக நேரம் தன் போக்கில் சென்றது. பின்னர், ஸ்மிதாவின் வீட்டை நெருங்கியதும் அவள் தோள் தொட்டு திருப்பி ,

"ஹே பைத்தியம் ...உனக்கும் ஹரிஷுக்கு ஏதோ பிரச்சினைன்னு எனக்கு புரியுது. ஆனா , இப்போ அதை யோசிச்சு Feel பண்ற Time இல்ல. கிட்டத்தட்ட ஒரு வாரம் கழிச்சு Tour முடிஞ்சு வீட்டுக்கு போற. So,  முகத்த கொஞ்சம் normal அ வச்சுக்கோ. ஒன்னு மட்டும் சொல்றேன்; எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்காத. புரியுதா ? "என்று அக்கறையுடன் கேட்டாள்.

அதுவரை திரண்டிருந்த வெள்ளம் பெருக்கெடுப்பதை போல அவள் தோள் மீது தலைசாய்த்து அழத் தொடங்கினாள் ஸ்மிதா. அவள் அழுகை சத்தம் கேட்டு முன்னிருக்கையில் இருந்த இருவரும் திரும்பிப் பார்க்க ஆர்த்தி ,'உடல்நிலை சரியில்லை' என சமாளித்தாள். பேருந்தில் சத்தமான பாடல் ஒலித்ததால் மற்ற அனைவருக்கும் அச் சத்தம் கேட்கவில்லை.

அவளது முதுகை மெதுவாக தட்டிக் கொடுத்தவாறே,
"Okay okay... ஒன்னும் இல்ல லூசு. இப்படியே வீட்டுக்கு போனா நல்லாவா இருக்கும் ? எல்லாம் சரியாகிடும்" என்று தன் பையினை திறந்து wet tissue ஒன்றை கொடுத்தாள். அதை வாங்கியவள் முகத்தை அழுந்த துடைத்து சரிசெய்து கொண்டாள். பின், ஸ்மிதா தன் சுவாசத்தை சரி செய்துகொண்டு,

" ஆர்த்தி..ஒன்னு சொன்னா என்ன தப்பா நினைச்சுபியா ?"என்று கேட்டாள்.

" அதுப்படி நினைக்காம இருப்பேன் ! ரொம்ப மோசமா நினைப்பேன்" என்று ஆர்த்தி கடுமையாக முகத்தை வைத்துக் கொண்டாள்.

அதில் சிரித்த ஸ்மிதா,
"Serious ஆ கேட்டா நீ இருக்கியே..." என்றவள் சிறிது இடைவெளிவிட்டு பின் தொடர்ந்தாள்,

காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)Dove le storie prendono vita. Scoprilo ora