கண்மணி உன்னை கண்டுகொண்டேன்💖

736 48 9
                                    

தெளிந்த வானத்தின் நடுவே செங்கதிர் தீட்டிய அந்த காலைப்பொழுதில் மெல்லிய பூங்காற்று தீண்ட உறக்கம் கலைந்தான் ஹரிஷ்.

என்றும் இல்லா புத்துணர்ச்சியோடு கிளம்பி வந்த ஹரிஷிடம் சாந்தி,

"ஹரிமா அம்மாவுக்கு நீ ஒரு help பன்னனும் டா" என்று கேட்டார்.

அதில் குழம்பியவன்,
" என்னடா இது அதிசயமா request லாம் செய்ற உண்மைய சொல்லு சாந்தி? எதற்கு இந்த பீடிகை?" என்றவாறு அருகில் வந்தான்.

"ம்ச்.. போடா விளையாடம கேளு. மித்ராக்கு ஏதோ environment related books தேவைப்படும் போல. எனக்கு தெரியுமான்னு கேட்டா. நீ தான் இதுல expert ஆச்சே. கொஞ்சம் பாத்து சொல்லுடா" என்றார்.

"இதுதான் matter ஆ. ஏன் அவங்களால தனியா தேடிப் கண்டுபிடிக்க முடியாதா? நீ என்ன recommendation ஆ. பெருசா build up லாம் கொடுத்த" என்று தன்னவளை அறியாமல் குறை கூறினான்.

"அதெல்லாம் இல்ல. அவ வேணாம் நான் பாத்துக்கிறேன்னு தான் சொன்னா. நான் தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு இது பத்தி details தெரியும்னு சொன்னேன். என் பையன்னு சொல்லியிருந்தா அவளே வேணாம்னு சொல்லியிருப்பா" என்று விட்டுக் கொடுக்காமல் பேசினார்.

" கொஞ்சம் scene party போல. ம்மா.. இப்ப என்ன செய்யணும் சொல்லு? இல்லாட்டி நீ என்ன விட மாட்ட" என்று தாயிடம் சரணடைந்தான்.

" அப்படி வா வழிக்கு. Details அ WhatsApp ல அனுப்புறேன்னு சொன்னா. Open பண்ணி பார்த்துட்டு எங்க இருக்கும்னு என்கிட்ட சொல்லு" என்று தன் கைபேசியை நீட்டினார்.

அவன் வாங்கிய அதே சமயம் அவளது குறுஞ்செய்தியும் வர எரிச்சலுடன் அதனைத் திறந்து பார்த்தான். அவள் அனுப்பிய தகவல்களை பார்த்தவாறு மேலே தெரிந்த புகைப்படத்தை பார்த்தவன் அதிர்ந்தான்.

பிரம்மை என எண்ணி அதனை விரிவுபடுத்த அதில் ஓவியமாய் தன்னவள் சிரிப்பதைக் கண்டு தடுமாற்றத்தோடு அமர்ந்தான். பல வாரங்கள் தாண்டி அவளைக் காண்கையில் தன்னையே இழந்து புகைப்படத்தினுள் தொலைந்தான். நிகழ்பவை கனவாய் போய்விடும் என அஞ்சியவன் திரையில் தெரிந்த அப் புகைப்படத்தை விரல்களால் வருடினான்.

காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)Место, где живут истории. Откройте их для себя