ஒருவாறாக ஹரிஷின் தாயும் தந்தையும் ஊட்டிக்கு வந்து சேர்ந்தனர். அவ்விடத்தின் குளுமையும் அழகிய சூழலும் இருவரையும் கவர்ந்தது. புதிய இடம் என்பதால் ஹரிஷின் தந்தைக்கு தன் வேலையில் முழுமையாக ஈடுபாடு கொள்ள சற்று நேரம் பிடித்தது.
தாய் சாந்திக்கோ இடமும் சூழலும் ரசிக்கும்படி இருந்தாலும் தேவையான பொருட்கள் கிடைக்கும் இடங்கள் குறித்து அறிந்து கொள்ள ஆர்வம் எழுந்தது.
அவர் புத்தகங்களின் பிரியை என்பதால் முதலில் நூலகம் செல்ல வேண்டும் என திட்டமிட்டிருந்தார். தன் கைப்பேசியில் தேடலின் மூலம் அருகில் இருக்கும் நூலகத்திற்கு காரில் விரைந்தார்.
புத்தகங்களுக்கே உண்டான வாசம் அவரை ஈர்த்தது. மெல்ல நுழைந்தவர் வருகைப் பதிவில் தன் கையொப்பத்தை இட்டுவிட்டு உள்ளே நுழைந்தார்.
அங்கே பழமை வாய்ந்த பல புத்தகங்கள் அவரை வாஞ்சையோடு அழைப்பது போலிருந்தது. உளவியல் பகுதியில் சென்று பார்க்க அங்கே புத்தகங்களை நெருக்கி வைத்திருந்தனர். அதில் 'உன்னில் தோன்றும் உலகம்' எனும் தலைப்பு கொண்ட புத்தகம் அவர் ஆர்வத்தைக் கூட்டியது.
அதனை மெதுவாக எடுக்க நினைத்து இழுக்க வராமல் நெருக்கத்தால் சண்டித்தனம் செய்தது. பொறுமை இழந்து வேகமாக அப்புத்தகத்தை அவர் இழுக்க அதனோடு ஐந்து ஆறு புத்தகங்களும் சேர்ந்து விழுந்தது.
"அடடா " என்றவாறு குனிந்து எடுக்கப் போக மற்றும் ஒரு கரம் நீண்டது.
பாந்தமான அழகுடைய அந்த பெண்ணை பார்த்தவுடன் சாந்திக்கு பிடித்துப்போனது.
தானும் குனிந்து எடுத்து வைத்தவளிடம்,
"Thanksமா.. இவ்ளோ silent ஆன place அ ரணகளமாக்கிட்டேனே. ஒரு நிமிடம் பயந்துட்டேன்" என்று சிரித்தார்.
அவளும் சிரித்தபடியே ,
"பரவால்ல aunty. Slip ஆகிறது பெரிய விஷயம் இல்ல" என்றாள்.
அவள் கைகளில் தங்கிய சில தத்துவ புத்தகங்களை கண்டவர் ,
"இந்த Booksலாம் படிக்கிற பழக்கம் இருக்கா? சின்ன பெண்ணாட்டம் அழகா இருக்கியே பார்த்தா. எல்லாம் make up ஆ அப்போ ? " என்று சிரித்தார்.
ВЫ ЧИТАЕТЕ
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)
Любовные романыHighest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்...