வார்த்தைகள் மழையாவது உன்னிடத்தில்🌧⛈

932 54 0
                                    

மருந்தை எடுத்தவன் அவள் கைகளைப் பூப் போல தாங்கி மெதுவாக இட்ட படியே வலியினால் முகம் சுழித்தவளிடம்,

" கொஞ்சம் பொறுத்துக்கோ சுமி. கவனமா இருந்திருக்கலாம்ல" என்றான்.

அவன் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றின் தாக்குதலால் அவள் விழிகளில் நீர்த்துளி உதித்தது.

" Sorry hari. வேணும்னு வைக்கல. வேறு ஏதோ நினைப்புல பண்ணிட்டேன்"
என்றாள்.

அவளது சொற்களின் உண்மையை உணர்ந்தவன்,

" சரி சரி இந்த பேச்ச இப்படியே விட்டுடலாம். இன்னைலருந்து நம்ம friends deal ஆ" என்று சினேகமாய் புன்னகைத்தான்.
மனம் லேசாக தானும் சம்மதித்தாள்.

" அப்றம் சொல்லு என்ன பாத்துட்டு ஏன் அன்னைக்கு அப்டி react பண்ண ?"

அவன் கேள்வி புரிந்தாலும்,
" நான் எதுவும் செய்யலையே " என்றாள்.

" அப்போ அன்னைக்கு அவன் சொன்னது உண்மைதான். என்ன உன் காலேஜ் பஸ்லருந்து யாரோ ஒரு பொண்ணு sight அடிச்சுருக்கா !"
என்றான் அப்பாவி போல முகத்தை வைத்துக்கொண்டு.

" அப்படிலாம் ஒன்னும் இல்ல just பாத்துட்டு தான் இருந்தேன் அதுவும் உங்களலாம் இல்ல அந்த அழகான நாய் குட்டிய தான் "

" பார்ரா கொஞ்சம் முன்னாடி தான் எதுவுமே தெரியாத மாதிரி face அ வச்சிருந்த. இப்ப என்னடான்னா நாய்க்குட்டிய தான் பாத்தேன்ற. அப்போ அத தூக்கி பேசிட்டுருந்த இந்த அம்சமான பையன் உன் கண்ல படல அதான "

அவளும் முகத்தை சற்று குழப்பமாக வைத்துக்கொண்டு,

" அப்டி ஒருத்தன் இருந்தானா? அச்சச்சோ நான் பாக்காம போயிட்டேன்" என்றாள்.

"அது சரி உனக்கு கண் பார்வை கொஞ்சம் weak போல. என்ன பண்றது என்ன மாதிரி ஒரு ஜீவன ரசிக்க உனக்கு கொடுத்து வைக்கல. சுத்தி கேட்டு பாரு எனக்கு ரசிகர்கள் கூட்டம் ஏராளம்"
என்றான் காலரை தூக்கி விட்டபடி போலி பெருமிதத்துடன்.

" அதான் நல்லா தெரியுமே எல்லார்ட்டயும் ஈ ஈ ..னு 32 பல்லும் தெரிய அன்பா சொல்லித் தர்றிங்களே Mr harish " என்றாள் உணர்ச்சியோடு.

காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora