என்னை அறியாயோ கண்மணி..❣

780 48 0
                                    

அடுத்து வந்த நாளில் அனைத்து மாணவிகளும் ஆசிரியர்களும் குழுமியிருக்க , இருவரும் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்காமலே போனது. ஹரிஷ் நாள் முழுவதும் மாணவிகளின் சந்தேகங்களை தீர்த்த வண்ணம் இருந்தான்.

அவனை ஒரு புறம் ரசிக்க மறுபுறம் தன் மனதை எண்ணி குழம்பியவளாய் இருந்தாள் ஸ்மிதா. அத்தனை வேலையிலும் சுழலும் அவன் கண்கள் தன் விழிகளை அவ்வப்போது சந்தித்து புன்னகைப்பதை அவள் காணத் தவறவில்லை. ஆனாலும் ,மனம் உணர்ந்ததை அறிவு ஏற்க மறுத்தது.

இதனை கண்ட சில மாணவிகள் வெளிப்படையாக கிசுகிசுக்க ஆரம்பித்தனர். இதனால் குழம்பியவள் அன்றிரவே அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினாள்.

ஆர்த்தி, ஸ்மிதா உறங்காமல் ஏதோ சிந்தனையில் இருந்ததை உணர்ந்து அவள் தோளைத் தொட்டு,

" ஹே என்ன யோசிச்சிட்டு இருக்க... கண்ண முழிச்சு கிட்டே dreams ஆ... "
என்றாள்.

ஸ்மிதாவோ ,
" ஒன்னுமில்ல. நீ தூங்கு. எனக்கு ஒரு வேலை இருக்கு" என்றாள்.

' அது சரி வேலை இருக்குன்னு சொல்லிட்டு ஹரிஷ் கிட்ட கடல போட போற' என நினைத்து மெலிதாக சிரித்தபடியே உறங்கி போனாள்.

சிறிது நேரத்தில் அவள் காத்திருந்த அழைப்பும் வந்தது. உடனே எடுத்து காதுக்கு கொடுத்தாள்.

"அடடா ... என் call க்கு தான் waiting ஆ உடனே எடுத்திட்ட ... போகப்போக Improvement ஆகுதே" என சிரிக்க,

" ஆமா ...waiting தான். என் கேள்விக்கு சரியான பதில் வேணும்" என்றாள்.

" எப்பவும் நான் தானே கேள்வி கேட்பேன். இன்னிக்கு என்ன புதுசா இருக்கு. சரி.... easy ஆன கேள்வியா கேட்கவும் cause எனக்கு அறிவு கொஞ்சம் கம்மி "

" விளையாடாத ஹரி... நான் serious அ பேசுறேன் "

" அது சரி.. madam என்னைக்கு தான் normal ஆ பேசிருக்கீங்க
.. கோவப்படாம கேளு.. பதில் சொல்ல நான் தயார். ஏற்கனவே இன்னைக்கு நிறைய கேள்விக்கு பதில் சொல்லி சொல்லி tired ஆகிட்டேன். Still உனக்காக இது கூட செய்ய மாட்டேனா.. கேளு சுமி கேளு"

காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)حيث تعيش القصص. اكتشف الآن