"Aunty... போதும் please போகலாம். எவ்வளவுதான் purchase பண்ணுவீங்க. Sweets, snacks, fruits, இதோட நிறைய grocery items வேற. இன்னும் 2 days ல எனக்கு exams start ஆகுது படிச்சே தீரணும். So, வாங்க " என்று இழுக்காத குறையாக அழைத்து வந்தாள் ஸ்மிதா.
பின்னர் களைப்பு தீர பழரச கடையில் வண்டியை நிறுத்தி இருவரும் இரண்டு சாத்துக்குடி பழச்சாறு வாங்கி அமர்ந்தனர்.
அதில் பாதி வரை பருகியவாறு சாந்தி,
" நான் என்ன செய்ய மித்ரா. இதோ வரேன் அதோ வர்றேன்னு சொல்லிட்டு இருந்தவன் திடீர்ன்னு நாளைக்கு வரேனுட்டான். கையும் ஓடல காலும் ஓடல. கொஞ்ச நாளாவே அவன் சரியில்லை. இப்பதான் கொஞ்சம் Normal அ பேசியிருக்கான். அதான் எல்லாம் surprising ஆ அவனுக்கு பிடிக்கும்னு arrange செய்றேன்" என்றார் .
அதைக்கேட்ட ஸ்மிதாவோ,
"அதுக்குன்னு இப்படியா ? ஒவ்வொரு கடையிலும் ஒரு மணி நேரம். கால் ரெண்டும் Bend எடுத்துரிச்சி. ஏன் aunty என்னாச்சு அவருக்கு?" என்று கேட்டாள்.
" அத விடு மித்ரா. அது பெரிய கதை இன்னொரு நாள் relaxed ஆ இருக்கிறப்போ சொல்றேன்" என்றவர், தான் வாங்கிய அனைத்திலும் கால்வாசி பங்கை அவளிடம் பிரித்துக் கொடுத்தார்.
அதனை வாங்க மறுத்தவளிடம் ,
" அதெல்லாம் கேட்க மாட்டேன். உனக்கும் சேர்த்து தான் வாங்கினேன். வீட்ல பேசிட்டு இருந்தப்ப சொன்னாங்க கொஞ்ச நாளாவே நீ dull ஆ இருக்கியாமே. உடம்புக்கு ஏதாவதுமானு பயப்படுறாங்க. So, ஒழுங்கா இதை வாங்கிக்கோ மித்ரா " என்று மிரட்டி கொடுத்தார்.
அவரது அன்பில் ஸ்மிதா உள்ளம் குளிர்ந்து விழிகளில் நீர் திரையிட சரி என்று வாங்கிக் கொண்டாள்.
அடுத்து வந்த வாரம் அவளுக்கு தேர்வு என்பதால் தொடர்ந்து பேச முடியாது போகலாம் என அடுத்த நாள் காலையில் இருவரும் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தனர்.
அதேசமயம் நுழைந்த ஹரிஷ் ஐ சாந்தி கவனிக்கவில்லை. அவன் தன் luggage ஐ சத்தமாக கீழே போட அதில் திரும்பியவர், ஸ்மிதாவிடம் அவன் வரவை கூறி அழைப்பை துண்டித்தார்.
ŞİMDİ OKUDUĞUN
காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)
RomantizmHighest rankings: #2 in காதல் #1 in தமிழ் #2 in குடும்பம் #5 in Tamil #56 in affection #89 in Romance காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்...