"இன்றிலிருந்து இவளும் உங்கள் அறையில் தான் தங்குவாள்" என்று ஒரு பெண்ணை விட்டுச் சென்றார் வாடன்.
ஸைனபும் ஹாலாவும் அந்தப் பெண்ணைப் பார்த்தனர். அவள் அங்கேயே தனது பைகளுடன் நின்று கொண்டிருந்தாள். அவளை சங்கடப்படுத்த விரும்பாமல் ஸைனப் எழுந்து சென்று தழுவி வரவேற்றாள்.
சலாம் கூறி கையைப் பிடித்தே உள்ளே அழைத்து வந்து அமர வைத்தாள். ஹாலாவும் அதே போல செய்ததும், அந்தப் பெண் அளந்தே புன்னகைத்தாள்.
"உங்கள் பெயர்?" ஹாலா கேட்க,
"யுஸ்ரா" என்றாள்.
சுமார் இருபத்திரண்டு அல்லது இருபத்து மூன்று வயதாக இருக்கலாம். பொலிவான முகம் கலையிழந்து காணப்பட்டது ஏனோ?
"நீங்கள் ஓய்வெடுக்கலாம்" என்றவாறு கட்டிலை ஒழுங்கு செய்து கொடுத்து விட்டு ஸைனப் எழுந்தாள். அவளது முகத்தின் சோபையிழப்புக்கோர் காரணம் இருந்தே ஆக வேண்டும்.
"ஹாலா, எனக்கு வேலையிருக்கிறது. நான் போய் வருகிறேன்" என்றவாறு உடுத்தியிருந்த அபாயவுக்கு மேலே ஒரு ஹிஜாபை அணிந்து கொண்டு ஒரு முறை நிலைக் கண்ணாடியில் சரி பார்த்து விட்டு வெளியேறினாள்.
"ஃபீ அமானில்லாஹ்!"அவளை வழியனுப்பி விட்டு அந்தப் புதியவளையே பார்த்த வண்ணமிருந்தாள் ஹாலா. அவள் மற்ற புறம் திரும்பிப் படுத்திருந்தாள்.
ஸைனப் சென்ற சற்று நேரத்துக்கெல்லாம் மீண்டும் கதவு தட்டப்பட்டது. "வாருங்கள்" என்றாள் ஹாலா அதே இடத்திலிருந்து.
கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தவள் பர பரவென்று தேடி எதையோ எடுத்தாள். "என்ன சகோதரி?" ஸைனபைக் கேள்வியாய் நோக்கிய ஹாலாவிடம்,
"கண்ணாடியை மறந்து விட்டேன்" என்று கூறி இளித்தவாறு கண்ணாடியை அணிந்து கொண்டு மீண்டும் வெளியேறினாள்.
"ஃபீ அமானில்லாஹ்!" மீண்டும் ஹாலா.
நஹ்லாவின் அறைக் கதவைத் தட்டியதும், "வருகிறேன்" என்று கூறி இரு விநாடிகளில் நஹ்லா கதவைத் திறந்து கொண்டு வந்தாள்.
YOU ARE READING
ஔியைத் தேடி...✔
Spiritualஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!