ஹம்தா தனது கணவனுடன் ஸைனபைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்திருந்தாள் அன்று மாலை. அவளது கணவன் அலீ மஸ்லமாஹ்வுடன் ஏதோ சம்பாஷணையில் முழ்கி விட, ஹம்தா உள்ளே சென்று வெகு நேரமாக ரிழாவுடனும் ஸைனபுடனும் கதைத்துக் கொண்டிருந்தாள்.
"இனியெப்படித் திருமண வாழ்வெல்லாம் போகிறது?" என்ற ஸைனபின் கேள்விக்கு இளித்தவள்,
"அல்ஹம்துலில்லாஹ், நன்றாகத் தான் போகிறது" என்று பதிலுரைத்தாள்.
"அல்ஹம்துலில்லாஹ்" ரிழா கூறியதும்,
"அது சரி... உனக்கு எப்போது திருமணம்?" என்று பிடுங்க,
"இன்ஷா அல்லாஹ் இன்னும் ஒரு மாதத்தில்" தன்னையறியாமலே ஸைனப் உளறி விட்டாள்.
"என்ன? என்ன? எப்போது? யார்? நீ என்னிடம் சொல்ல நினைக்கவேயில்லயைல்லவா?" என்று ஹம்தா கோபித்துக் கொள்ள,
"ஹேய்... அதெப்படிச் சொல்லாமலிருப்பது? நேற்றிரவு தான் முடிவானதே" என்று சமாதானம் செய்தாள் ஸைனப்.
"சரி சொல். யாரது? உனது ஹாபிழைக் கண்டுபிடித்து விட்டாயா?" அவள் ஆர்வமாகக் கேட்கவும், ஆமெனத் தலையசைத்தாள் மற்றவள்.
"ஹாபிழ் மஸ்லமாஹ் தானே?" என்றதும் அதற்கும் தலையசைத்தாள்.
"ஹஹா எனக்கு அப்போதே தெரியும். நான் சொல்லவில்லை? யேஹ்ஹ்!!! மாஷா அல்லாஹ்! சந்தோஷமாக இருக்கிறது ஸைனப். எனக்கு முழுக் கதையையும் சொல்ல வேண்டும்" என்று படபடவெனப் பேசியவள்,
"ஹம்தா, வீட்டுக்குப் போக நேரம் சரி இல்லையா?" என்ற அலீயின் குரலில் ஆர்வம் தோய்தவளாய்,
"நான் இரவில் உனக்கு அழைக்கிறேன் இன்ஷா அல்லாஹ். அப்போது பேசலாம்" என்றவள் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள்.
***
அன்று அனைவரையும் சயீத் வீட்டில் இரவுணவுக்காக அழைத்திருக்கவே, அதற்காக மஃரிப் அதான் கூறியதும் ரிழாவையும் அல்பஷரீயையும் கொண்டு சென்று அங்கு விட்ட மஸ்லமாஹ் மஸ்ஜிதுக்குச் சென்றான்.
YOU ARE READING
ஔியைத் தேடி...✔
Spiritualஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!