19 - மஸ்லமாஹ்வுக்கு திருமணம்

62 16 18
                                    

அன்று...

மேசைகளும் கதிரைகளும் அடுக்கப்பட்டுத் தூக்கிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன. பாய்கள் சுருட்டப்பட்டு, ஒலிபெருக்கிகள் கழற்றப்பட்டுக் கொண்டிருந்தன.

அதோ தெரிந்த பெரிய பெயர்ப்பலகையைக் கழற்றி இருவர் தூக்கிச் சென்றனர். ஸைனப் அல் பஷரியின் மூன்றாவது புத்தகமும் வெளியிடப்பட்டு விட்டது.

ஒரு மணி நேரமாக நடந்த வெளியீட்டு விழா ஒருவாறு முடிந்ததும் ஓரமாக நின்று அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். ரயீஸா உட்பட அவளது சகோதரிகளனைவரும் வந்து நிகழ்வில் கலந்து கொண்டது மனதைக் களிப்பூட்டியது.

ஒவ்வொருவராகத் தங்களுக்கேயூரிய பாணியில் வாழ்த்து மொழிகளை அள்ளியிறைத்தனர். நுழைவாயிலினருகே சில நூறு புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்க அவற்றை மக்கள் விலை கொடுத்து வாங்கிச் சென்று கொண்டிருந்தனர்.

மின்விளக்குகளும் மின்விசிறிகளும் ஒவ்வொன்றாக அணைக்கப்பட, மக்களும் ஆரவாரமின்றி வெளியேறியவாறு இருந்தனர். எஞ்சியிருந்தது கிட்டத்தட்ட இருபது பேர் மட்டுமே.

அனைத்தும் ஒதுக்கப்பட்டு மண்டபத்தைப் பழையபடி தூய்மையாக்கிக் கொடுத்து விட்டு, ஸைனபும் ரிழாவும் மஸ்லமாஹ்வும் வெளியேறினர். இன்றைய நிகழ்வின் ஆனந்த வெள்ளத்தில் அவள் மிதந்து கொண்டிருந்தாள்.

"அல்ஹம்துலில்லாஹ்!" இறைவனைப் புகழ்ந்து கொண்டாள்.

நுழைவாயிலினருகே விற்பனை செய்யப்பட்ட புத்தகங்களின் பணம் என்று கூறி ஒரு கட்டை அவள் கையில் கொண்டு வந்து கொடுத்தார் ஒருவர். நினைத்தை விட அதிகமாகவே ரியால் நோட்டுக்கள் அவளைப் பார்த்து நகைத்தன.

அதை மஸ்லமாஹ் பார்க்காத போது அந்த மனிதரிடமே கொடுத்து அதை ஸிராதுல் முஸ்தகீமின் பணிகளுக்காகச் செலவிடுமாறு உஸைத் அத்தைலமியிடம் கொடுத்து விடுமாறு கூறினாள்.

அச்சிடப்பட்ட புத்தகங்கள் அனைத்துப் புத்தக நிலையங்களுக்கும் கடைகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. நூலகங்களுக்கு இலவசமாகவே வழங்கினாள்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now