ஸைனப் எழுதிய புத்தகம் முழுமையாகத் தயாராகி விட்டது. அதை அச்சிடும் பொறுப்பை ரயீஸா ஏற்றிருந்தார். முதலில் இரண்டாயிரம் பிரதிகளை அச்சிட்டுக் கொண்டு வந்து கொடுத்தார்.
பொது மக்கள் முன்னிலையில் ஒரு வெளியீட்டு விழா நடாத்தவே வேண்டுமென்று பிடிவாதமாக இருந்தார் ரிழா. அவளது மற்ற புத்தகங்களை ரிழா வாசித்திருக்கிறார்.
ஸைனபின் எழுத்து மீது அவருக்கொரு தனி ஈடுபாடு. எனவே, பெருமையுடன் அவளை உலகுக்கு அறிமுகப்படுத்த வேண்டுமென்று எண்ணியது அவர் மனம்.
ஏற்கனவே அரபியிலும் ஆங்கிலத்திலும், "கடந்து செல்லும் பாதை" என்றதொரு அறவூட்டும் இஸ்லாமியப் புத்தகத்தை வெளியிட்டிருந்தாள் அவள். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெறும் மூன்று மாதங்களில் விற்பனை செய்யப்பட்டு அவளுக்குப் பாரியதொரு வருவாயை வரவழைத்துத் தந்தன.
அதில் முக்கால்வாசிப் பணத்தை சற்றும் போசிக்காமல் கமரிய்யாவினால் மேற்கொள்ளப்பட்ட பொதுப்பணிகளுக்குச் செலவிட்டாள். எஞ்சிய பணத்தில் தனது சொந்தத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டவள் ரயீஸாவுக்கும் தனது சகோதரிகளுக்கும் பரிசில்கள் வாங்கிக் கொடுத்தாள்.
இளமையான வயதில் இந்த சாதனை என்று பலரும் அவளைப் பாராட்டினர். ஷேஃக் நழ்ர் அல் ரய்யானும் அவரது மனைவியும் அவளைத் தங்கள் வீட்டுக்கு அழைத்து உபசரித்தனர். ஒரு மடிக்கணனியும் செல்போனும் பரிசளித்தனர்.
முதல் புத்தகத்துக்குக் கிடைத்த வெற்றியே அதன் பிறகு இன்னமின்னும் எழுத அவளைத் தூண்டியது. இஸ்லாத்தின் போதனைகளை எழுத்து வடிவில் எடுத்துரைக்கும் ஆழமான அறிவை அவள் பெற்றிருந்தாள்.
ரயீஸா அச்சிட்டு அனுப்பியிருந்த புத்தகத்திலொன்றைக் கையிலெடுத்துக் கொண்டு கட்டிலில் சாய்ந்தவள் அதைச் சரிபார்ப்பதற்காக மீண்டும் ஒரு முறை வாசித்துக் கொண்டிருந்தாள்.
ஆர்வம் தாங்க முடியாது வெளியிடுவதற்கு முன்னரே ரிழாவும் ஒன்றையெடுத்து வாசித்து முடித்து விட்டார். "இந்த இரண்டாயிரம் போதுமென்று நினைக்கிறாயா அல்பஷரீ?" அவர் கேட்க,
YOU ARE READING
ஔியைத் தேடி...✔
Spiritualஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!