9 - மஸ்லமாஹ்வின் ஹிப்ழ் நாட்கள்

89 21 27
                                    

தனது நீண்ட தோப்பின் (Thobe) கைகளை சரி செய்து விட்டுக் கொண்டு, கபிய்யாவைத் (Ghuthra/Kafiyya) தலையில் நேர்த்தியாக அணிந்து, கைக்கடிகாரத்தை அணிந்து கொண்டவனாய் தனது அறையிலிருந்து வெளியே வந்தான்.

தாய் மற்றும் சகோதரியின் நெற்றிகளில் முத்தமிட்டு விட்டு ஜும்ஆத் தொழுகைக்காக விரைந்தான் மஸ்லமாஹ். அவர்களது வீட்டிலிருந்து சற்றுத் தூரத்திலே மஸ்ஜித் இருந்தது. எனவே, காரில் தனது சகாதரன் சயீத் வீட்டுக்குச் சென்று அங்கே காரை நிறுத்தி விட்டு அவனுடன் மஸ்ஜிதுக்குச் நடந்து செல்வது மஸ்லமாஹ்வின் வழக்கம்.

மஸ்ஜிதை நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டும் நன்மையைப் பெற்றுத் தருமல்லவா? அதைக் காரில் சென்று இழக்க அவன் விரும்பவில்லை.

சயீத் சலாம் கூறியதும், சென்ற வாரம் இதே இடத்தில், இதே நேரத்தில் நடந்தது நினைவு வந்தது.

"அஸ்ஸலாமு அலைக்கும் யா அஃஹீ!" என்று முகமெல்லாம் புன்னகை பூக்க, தம்பியை வந்து தழுவிக் கொண்டான் சயீத். அப்போது கையிலிருந்த அத்தர் குப்பியினால் மஸ்லமாஹ்வின் தோப்பை (Thobe) சிறிது நனைத்து விட்டான்.

"சகோதரரே என்ன செய்கிறீர்?" என்றவாறு அந்த அத்தர் குப்பியைப் பிடுங்கிப் பார்த்தான்.

"தொழுகைக்கு வரும் போது வாசனை பூசிக் கொண்டு வர வேண்டுமென எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்?" எனக் கடிந்து கொண்ட சயீதைப் பார்த்து,

"எனக்கு இந்த அத்தரெல்லாம் பிடிக்காது" என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான்.

"உனக்குப் பிடிக்காவிட்டால் பரவாயில்லை. மற்றவர்களுக்கு உனது வியர்வை வாசனை வரக் கூடாதல்லவா?" என்று தம்பியின் காலை வாரி விட,

"ஆ... ஆ... போதும். ஜும்ஆவுக்கு நான் குளித்து விட்டுத் தான் வருகிறேன்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டான் மஸ்லமாஹ்.

அதையெண்ணிச் சிரித்துக் கொண்டு சலாத்துக்குப் பதிலுரைத்தான் மஸ்லமாஹ்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now