மஸ்லமாஹ் செயலாளராகப் பணியாற்றும் ஸிராதுல் முஸ்தகீம் அமைப்பு நாளுக்கு நாள் முயன்று உழைத்துக் கொண்டேயிருந்தது.
ஏழைக் குடும்பங்களுக்காக உதவிப் பணத் தொகை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுப் பம்பரமாக உழைத்துக் கொண்டிருந்தது இளைஞர் பட்டாளம்.
தங்கள் அமைப்பிலுள்ள, சற்றுச் செல்வம் படைத்த அனைவருமே தம்மால் இயன்றளவு பணத்தொகையைக் கொண்டு வந்து ஒப்படைத்திருந்தனர். ரியால் நோட்டுக்கள் மேசையில் குவிந்து கிடக்க, ஐந்தாறு பேர் வட்டமாக அமர்ந்திருந்தனர்.
இருவர் பணத்தை எண்ண, ஒருவர் பொருத்தமான உறைகளுக்குள் அவற்றை வைத்து ஒட்ட, இன்னொருவர் அதில் உரியவரின் பெயரெழுத, அதைச் சரி பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தான் இன்னொரு இளைஞன்.
"இதையெல்லாம் வீடுகளுக்குக் கொண்டு சென்று கொடுப்பதற்கு யாரை நியமிக்கப் போகிறோம்?" முசய்யப் மஸ்லமாஹ்வைப் பார்க்க,
தனது மூக்குக் கண்ணாடியை இழுத்து அதை மூக்கில் சொகுசாக அமர வைத்து விட்டு, "விரும்பியவர்கள் அதைச் செய்யலாம்" என்றான்.
"ஐந்தைந்தாகப் பிரித்து ஒவ்வொருவரிடமும் கொடுப்போம். அவற்றை உரியவரிடம் கொண்டு சேர்ப்பது அவர்களது பொறுப்பு" இவ்வாறு ஸிராதுல் முஸ்தகீம் அமைப்பின் தலைவர் உஸைத் அத்தைலமி கூற, அனைத்து அங்கத்தவர்களும் அதை ஆமோதித்தனர்.
ஸிராதுல் முஸ்தகீம் எனும் இளைஞர்களின் இஸ்லாமிய அமைப்பு பதினொரு வருடங்களுக்கு முன்னர் ஹாஷிர் அர்ரியாஸினால் தோற்றுவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பொது மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு நிலவிய போதிலும், அவ்வமைப்பின் முதல் அங்கத்தவர்களான பதினேழு இளைஞர்களும் சற்றும் விட்டுக் கொடுக்காமல் தங்கள் பணியை முன்னெடுத்துச் சென்றனர்.
பொது மேடைகளில் ஏறி ஏகத்துவ அழைப்பு விடுப்பது, பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதுவது, மக்கள் மூழ்கிப் போயிருக்கும் ஷைத்தானியப் போக்கை வமர்சிப்பது எனப் பலவற்றை அவர்கள் செய்து வந்தனர்.
YOU ARE READING
ஔியைத் தேடி...✔
Spiritualஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!