34 - முதல் மாணவன்

52 14 11
                                    

அனைத்து கமரிய்யர்கள் மற்றும் ஸிராதும் முஸ்தகீமியர்களின் ஒப்புதலுடன் இரு அமைப்புக்களையும் ஒன்றிணைத்து விட்டனர். ஆண்கள் மேற்கொள்ளும் பணிகளைப் பெண்களும் தங்களுக்குள் மேற்கொள்ளும் ஒரு வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.

கமரிய்யர்கள் எதிர்பார்த்தது போன்று ஒவ்வொரு நாளும் புதிதாகப் பெண்கள் வந்து இணைந்த வண்ணமே இருந்தது அவர்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். புதிதாகத் தொற்றிக் கொண்ட உற்சாகத்துடன் அன்று அனைத்துப் பெண்களும் தங்கள் அலுவலகத்தில் வந்து கூடியிருந்தனர்.

நேற்று நடைபெற்ற சிறுவர்களுக்கான பேச்சுப் போட்டியை விடவும் சூடு பிடித்திருந்த விடயம் கமரிய்யாவுக்குப் புதுப்பலம் கிடைத்து விட்டதாகப் பெண்கள் மனதில் துளிர் விட்டிருந்த நம்பிக்கை தான். நேற்றைய நிகழ்வுக்காக அலங்கரிக்கப்பட்டிருந்தவை அப்படியே இருக்க, அவற்றை இரு பெண்கள் கழற்ற ஒதுக்கிய வண்ணமிருந்தனர்.

தங்கள் தாய்மாருடன் வந்திருந்த சிறுவர்களும் சிறுமியரும் ஆங்காங்கே பிய்த்துப் போட்ட காகிதங்களை அள்ளியிறைத்த வண்ணம் ஓடி விளையாடி மண்டபத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தனர்.

"சரி... அஸ்ஸலாமு அலைகும் யா அஃஹவாதீ!" என்று எழுந்து நின்று அனைவரையும் அமைதிப்படுத்திய ஸைனப் மேலும் தொடர்ந்தாள்.

"மகிழ்ச்சியான விடயம் என்னவென்றால்... நாம் எதிர்பார்த்ததற்கும் அதிகமானவர்கள் வந்து புதிதாக இணைந்து கொண்டது தான். அல்ஹம்துலில்லாஹ்!" என்று விட்டு கண்களைச் சுழற்றி அனைவரையும் பார்த்தாள்.

அவளது முகபாவனையை அனைவரும் பிரதிபலித்துக் காட்ட, புதிய கமரிய்யர்கள் மிகவும் அவதானமாக தங்கள் தலைவி சொல்வதை செவிமடுத்த வண்ணம் அமர்ந்திருந்தனர்.

ஸைனபும் நஹ்லாவும் பேசி முடிந்த பின்னர், அன்றைய ஒன்றுகூடல் முடிவுக்கு வந்ததும் அப்ராவையும் ஹம்தாவையும் தவிர மற்ற அனைவரும் தத்தமது வீடுகளுக்குச் சென்றனர். அவர்களிருவரும் ஹம்தா அடுத்த நாள் பேச வேண்டியிருந்த தலைப்புக்காக புத்தகங்களைப் புரட்டிக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தமையே அதற்குக் காரணம்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now