سُبْحَٰنَ ٱلَّذِىٓ أَسْرَىٰ بِعَبْدِهِۦ لَيْلًا مِّنَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ إِلَى ٱلْمَسْجِدِ ٱلْأَقْصَا ٱلَّذِى بَٰرَكْنَا حَوْلَهُۥ لِنُرِيَهُۥ مِنْ ءَايَٰتِنَآۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ
(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன்; அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான்; (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சுற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம்; நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும்; பார்ப்போனாகவும் இருக்கின்றான். (17:1)
அபூ ஹுறைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பள்ளிகளைத் தவிர (நல்லறங்கள் செய்யும் எண்ணத்தில்) பிரயாணம் செய்யாதீர்கள்: மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா. (புகாரி)
ரிழாவுக்கு அழைப்பை ஏற்படுத்தி வீட்டிலுள்ளோருடன் நீண்ட நேரம் கதைத்தனர் இருவரும். மதீனாவிலிருந்து நேற்றிரவு பலஸ்தீனை வந்தடைந்ததாகத் தெரிவித்த போது ரிழாவினால் கண்ணீர் வடிக்கவே முடிந்தது.
பலஸ்தீனைப் பற்றி நினைக்கையிலே பல வருடங்களுக்கு முன்பு அவரது நெஞ்சில் நெருப்பை மூட்டிய அந்தக் கோரக் காட்சிகள் தான் மனத்திரையில் தோன்றின. பிள்ளைகளுக்காக அமைதி காத்தவர் புன்னகையுடன் அவர்களோடு கதைத்தார்.
தனது தாயின் துன்பத்தை மஸ்லமாஹ் புரிந்து கொள்ளாமலில்லை. ஆனால், அவர் இறைவன் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமென அவன் எதிர்பார்த்தான். இன்ஷா அல்லாஹ் இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லத் தானே போகிறார்கள்?
படிக்கட்டுக்களில் ஏறியவர்களின் இதயங்கள் தாறுமாறாகத் துடிக்கத் தொடங்கின. அவர்களது நீண்ட காலக் கனவு! ஆசை! எல்லாமே...
YOU ARE READING
ஔியைத் தேடி...✔
Spiritualஓர் அநாதைப் பெண் தன் வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்களையெல்லாம் கடந்து ஓர் ஔியைத் தேடிப் பயணிக்கும் பாதை!