20 - ஸைனப் நினைத்தது

85 18 20
                                    

ஆறு முழு வருடங்களின் ஷரீஆப் பட்டப் படிப்பை முழுமையாக பூர்த்தி செய்து விட்டோம் என்ற திருப்தியில் பரீட்சையை முடித்துவிட்டு வந்திருந்தாள் ஸைனப்.

அடுத்த நாள் பகல் நடந்த ஹம்தாவின் திருமணத்தில் அவளது உற்ற தோழியாகச் சென்று கலந்து கொண்டவள் அப்போது தான் வீட்டுக்கு வந்து சோர்வுடன் கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தாள்.

ஒரு சாலிஹான ஆணுக்கு ஹம்தாவை மணமுடித்துக் கொடுத்து விட்டோம் என்ற திருப்தியில் ரயீஸாவும் அன்று மாலை அமைதியாக ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவரது எண்ணங்கள் ஸைைபைச் சுற்றியே சுழன்றன. அவளது எதிர்காலத்தைப் பற்றிய யோசனையில் ஆழ்ந்தார். இதுவரை எத்தனை நல்ல வரன்கள் வந்தபோதிலும் அத்தனையையும் அவள் அலட்சியமாகத் தட்டிக் கழித்தமை ஏனோ ரயீஸாவை சிந்திக்க வைத்தது.

அவள் எதைத் தேடுகிறாள்?

எப்படிப்பட்ட மனிதனை தேடுகிறாள்?

ஒருமுறை அவளிடமே கேட்டபோது ரயீஸாவுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை. இப்போது அவளுக்கு சரியாக வயது இருபத்தைந்து. இன்னும் எத்தனை காலத்துக்கு தனியாக வாழ்வது? தனக்கென்று ஒரு துணை வேண்டாமா? பெண்ணல்லவா அவள்?

அல்குர்ஆனை மனனமிட்டு அதை விளங்கிப் படித்து இன்று ஒரு இஸ்லாமிய மார்க்க அறிஞராக திகழ்கிறாள். இன்னும் பட்டம் பெறுவது மட்டும் தான் பாக்கி. பரீட்சை எழுதி ஆகிவிட்டது. இனி நிம்மதி தான். அவளது தஃவாப் பணிகளுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும்.

அவளுக்குப் பெற்றோர் இல்லா விட்டாலும் வளர்ப்பில் அந்தக் குறை சிறிதும் இல்லாமல் இஸ்லாமிய மார்க்கத்தின் நினைவூட்டல்களோடு அப்படிப்பட்ட சூழலில் சிறு வயது தொடக்கமே அந்த அநாதை விடுதியில் வளர்க்கப்பட்டிருந்தாள்.

முயற்சி செய்து, இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை முறையாக ஏற்று தன் வாழ்வில் நடைமுறைப் படுத்தக் கூடிய சிறந்த முஸ்லிம் பெண்மணிகளாக, அந்த அனைத்து பெண்களையும் வளர்த்திருந்தார் ரயீஸாவும் அவரது சகோதரியும்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now