28 - நிகாஹ்

63 15 30
                                    

பைதுல்லாஹ்!

அவள் எங்கு அமர்ந்து எதைச் செய்ய ஆசைப்பட்டாளோ, அந்தப் புனித இடத்தில் இப்போது அமர்ந்திருக்கிறாள். அவளது விழிகள் கஃபதுல்லாஹ்வை விட்டு அகல மறுத்தன.

அவளருகிலே அமர்ந்து கையைப் பற்றிக் கொண்டு தனது அழகிய குரல் கொண்டு சூரதுல் கஹ்பை ஓதிக் கொண்டிருந்த மஸ்லமாஹ்வும் கண்களை அங்கேயே நிலைக்கச் செய்திருந்தான்.

அதுவொரு கனவு போல இருந்தது இருவருக்கும். அவன் ஓதி முடித்ததும், தூரத்தில் பல குரல்கள் ஒருமித்து ஒலித்தன. அவர்கள் கூட அல்குர்ஆனின் ஏதோவொரு வசனத்தை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டிருந்தனர்.

காது கொடுத்துக் கேட்ட போது தெளிவாக விளங்கியது.

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَطِيعُوا۟ ٱللَّهَ وَأَطِيعُوا۟ ٱلرَّسُولَ وَأُو۟لِى ٱلْأَمْرِ مِنكُمْۖ فَإِن تَنَٰزَعْتُمْ فِى شَىْءٍ فَرُدُّوهُ إِلَى ٱللَّهِ وَٱلرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْءَاخِرِۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا

"நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள். இன்னும் இத்தூதருக்கும் உங்களில் அதிகாரமுடையோருக்கும் கட்டுப்படுங்கள். நீங்கள் ஏதேனும் ஒரு விடயத்தில் முரண்பட்டுக் கொண்டால், நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்வோராக இருந்தால், அதனை அல்லாஹ்விடமும் இத்தூதரிடமும் (தீர்வை வேண்டித்) திருப்பி விடுங்கள். இதுவே மிகச் சிறந்ததும் அழகான முடிவுமாகும்" (4:59)

மக்களனைவரும் ஒரு மனிதரைச் சூழ்ந்து கொண்டு அவரை நெருங்கிச் செல்வதைக் கண்டனர். அவர் யார்? அவரது முகத்தைக் காண முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அவரைப் போல ஒரு மனிதரை இந்தப் பூவுலகில் தேடவே முடியாது.

பல்லாயிரம் விளக்குகளைக் கொண்டு வந்து ஓரிடத்தில் சேர்த்து வைத்தால் அவையெல்லாம் தோற்றுப் போகும் படி முகத்தில் அத்தனை பிரகாசம்! பேரொளி!

"யா ரஸூலல்லாஹ்!"

ஸைனப் திடுக்கிட்டு விழித்தாள். கண்கள் அகன்று அந்த இருளிலும் சுவரை வெறித்துக் கொண்டிருந்தன. என்ன நடந்ததென்று ஜீரணிக்கவே சில கணங்கள் தேவைப்பட்டன.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now