22 - ஹிஜாப்

63 18 32
                                    

அன்றிரவு அங்கேயே தங்கிய சயீத் குடும்பத்தினர் விடிந்ததும் காலையுணவை உண்டு விட்டே தங்கள் வீடு சென்றனர். நேற்று இரவு முழுவதும் கதைத்துக் கொண்டு விழித்திருந்ததால் காலையிலும் அனைவரையும் தூக்கம் வந்தது தழுவிக் கொண்டது.

தூக்கத்தை உதறித் தள்ளி விட்டு அல்பஷரீ அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பெண்கள் ஒன்றுகூடலுக்குச் செல்வதற்குத் தயாரானாள். ரிழாவிடமும் அல்அம்ரீயிடமும் கூறிவிட்டு வெளியேறினாள்.

முற்றத்தில் பூஞ்செடிகளுக்குத் தண்ணீரூற்றிக் கொண்டிருந்தான் மஸ்லமாஹ். வெளியே கேட்டினருகில் யாரோ இருவர் வந்து நிற்பது தெரிந்தது. அவர்கள் சலாம் சொன்னார்கள்.

ஆண்களென்று தெரிந்து கொண்டதும் சற்றுப் பின்னோக்கி நகர்ந்து அவர்கள் செல்லும் வரை ஓரத்தில் ஒதுங்கி நின்றாளவள். மஸ்லமாஹ் தனது வேலையை நிறுத்தி விட்டுச் சென்று அவர்களுடன் கதைத்தான்.

அவனது சகாக்கள் தான். உஸைதும் முஜாஹிதும் ஏதோ வரவு செலவு விபரம் கேட்டு வந்திருந்தனர். அவர்களை உள்ளே அழைத்தவன் ஸைனப் வைளியே போவதற்காகக் காத்து நிற்பது கண்டு,

"நீ போகலாம் அல்பஷரி" என்று அவளைப் பார்க்காமலே கூறி விட்டு அவசரமாக தனது தோழர்களை உள்ளே அழைத்துச் சென்றான்.

மனதுக்குள் பெண்களை மதிக்கும் அவர்களுக்கு நன்றி கூறிக் கொண்டு தலையைத் தாழ்த்தியவாறு நடந்தாள் வீதியோரமாய். ஆங்காங்கே ஒரு சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். சில வாகனங்கள் பெரிதாக இரைச்சலில்லாது போய்க் கொண்டிருந்தன.

பேச வேண்டிய விடயங்களை மனத்திரையில் கொண்டு வந்து ஒரு முறை நிறுத்திப் பார்த்தவாறு திருப்தியுடன் நடந்து போய்க் கொண்டிருந்தாள். சூரியன் படிப்படியாக உச்சிக்கு வந்து கொண்டிருந்தான்.

திடீரென ஒரு பர்ஃபியூம் வாசனை வந்து நாசியைத் துழைத்துச் செல்ல, யாராே ஒரு ஆணின் பெயரைக் கூறி சிலர் கிண்டல் செய்யத் தொடங்கினர். அது மிக அருகில் கேட்டதும் தனது தலையை வெடுக்கென உயர்த்தி என்ன நடக்கிறதென்று பார்த்தாள்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now