21 - ஸைனபின் ஹாபிழ்

55 17 24
                                    

Assalamu alaikum!
Guys, Jazakallahu hairan for 1K+ reads❤
Keep supporting!

***

ஹம்தாவுக்கு அழைப்பை ஏற்படுத்திய ஸைனப் அவள் ஏற்கும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. சற்று நேரம் பொறுமையாக இருந்தவள் அழைப்பைத் துண்டித்தாள்.

பரீட்சை முடிந்து விட்டதால் புத்தகங்களையெல்லாம் வேறு வேறாகப் பிரித்து இறாக்கைகளில் அடுக்கினாள். இந்தக் குர்ஆன், ஹதீஸ் விளக்கங்களும் குறிப்புக்களும் பரீட்சைக்கு மட்டும் படித்து விட்டு வீசி விடுவதற்கல்ல.

வாழ்க்கை முழுக்க அவை தேவைப்படுமென்பதால் அனைத்தையும் முறையாக அடுக்கி விட்டு இடுப்பில் கைகளை வைத்துக் காெண்டு ஒருமுறை அவற்றையெல்லாம் கண்களால் மேய்ந்தாள்.

ரிழா முற்றத்தைப் பெருக்கிக் கொண்டிருப்பதைத் திரைச்சீலையினூடாகக் கண்டாள். அல்அம்ரீ அவருடன் ஏதோ கதைத்தவாறு பூஞ்செடிகளுக்கு நீரூற்றிக் கொண்டிருந்தாள். மஸ்லமாஹ் கல்லொன்றால் அமர்ந்து தனது கண்ணாடியைக் கழற்றிக் கை விரலினால் சுழற்றியவாறு தாயையும் சகோதரியையும் அவதானித்துக் கொண்டிருந்தான்.

திரைச்சீலையை சரி செய்தவள் கட்டிலில் அமர்ந்து ஒரு பெருமூச்சை விட்டாள். நேற்று ரிழா கதைத்த விடயம் அவள் மனதைக் குடைந்தது. இரவு தூங்க முன்னர் இஸ்திஃஹாரா தொழுதிருந்தாள்.

இந்த விடயத்தைப் பற்றியதோர் நல்ல அபிப்பிராயம் அவள் மனதில் தோன்றிற்று. இத்தனை காலமாக ஒவ்வொரு வரனாக ஒதுக்கித் தள்ளியவளுக்கு இதில் மட்டும் ஏதோவொரு வித்தியாசம் விளங்கியது.

அதன் பிறகு மஸ்லமாஹ்வின் முன் தவறியாவது அவள் போகவில்லை. அவனில்லாத நேரத்திலேயே கமரிய்யாவின் அலுவலகத்துக்குச் சென்று வந்தாள்.

'இவர் தான் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஹாபிழா?' அவள் மனம் கேட்டுக் கொண்டு 'ஆம்' என்று விடையும் கண்டது.

இன்னும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தே முடிவெடுக்கலாம் என்று காலை எழுந்ததிலிருந்து அந்நினைவைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

ஔியைத் தேடி...✔Where stories live. Discover now