Part 3

327 36 15
                                    

சித்து - அமரா யார் இவங்க..... இங்க என்ன நடக்குது......யாருடைய கல்லறை இது..... நீ ஏன் இங்கே இருந்து அழுதுகிட்டு இருக்க
அமரா உன்னை தான்

அமரன் - இவங்க........இவங்க என்னுடைய அம்மாவை பெத்தவங்க... என்னோட பாட்டி

சித்ரா - என்னது உன் பாட்டியா.......ஆனா நீ அனாதைன்னு தானே சொன்ன

அமரன் - என்னை மன்னிச்சிடு சித்ரா இன்னைக்கு என் பிறந்த நாள் என் அம்மா என்னை விட்டு பிரிந்த நாளும் கூட இந்த நாளில் உன்கிட்ட நான் எல்லா உண்மையும் சொல்லனும்னு நெனச்சு தான் உன்னை இங்க அழைச்சிட்டு வந்தேன்

சித்ரா - என்னது...என்ன உண்மை? என்ன உண்மை சொல்ல போற... அப்போ நீ இதுக்கு முன்னாடி என்கிட்ட பொய் தான் சொல்லி இருக்கியா

ரத்னா - அம்மாடி கொஞ்சம் பொறுமையா இரும்மா.... நீ முதல்ல உள்ள வா.... வந்து உட்காரு

சித்ரா - இல்ல நான் எங்கேயும் வரல அமர் இங்க என்ன நடக்குது எனக்கு ஒண்ணுமே புரியல... ஏன் இந்த இடம் மட்டும் எரிஞ்சு இருக்கு.....

ரத்னா - நான் தான் சொல்றேன் இல்ல வா மா உள்ள வா

என்று ரத்தினம் அழைக்க... அமரனும் சித்ராவும் ரத்தினாவுடன் செல்ல

ரத்னா - உட்காருமா

சித்ரா - இல்ல பரவாயில்லை

ரத்னா - அமர் கண்ணைத் தொடபா

அமரன் - சித்து உட்காரு

சித்து - ஹ்ம் ஹ்ம் இல்ல முதல்ல இங்க என்ன நடக்குதுன்னு சொல்லு எனக்கு ஒண்ணுமே புரியல

ரத்னா - இங்க பாருமா... இந்த போட்டோல இருக்காளே "சாமந்தி" இவள் என்னுடைய மகள்.....என் மகள் எனக்கு ஒரே பொண்ணு தான்.....அவளை சீரும் சிறப்புமா வளர்த்து அவங்க அப்பா படிக்க வச்சாரு....அவர் போனதுக்கப்புறம் என்னால அவளை மேற்கொண்டு படிக்க வைக்க முடியல.. அவளோட பதினெட்டு வயசுல அவள் ஒரு துணி கடையில வேலைக்கு சேர்ந்தாள்....அந்த கடையின் முதலாளி விஜயகுமார் அவள் மேல ஆசைப்பட்டு அவளை முறைப்படி என் கிட்ட பொண்ணு கேட்டாரு..... முதல்ல என் மகள் அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கல.... ஆனா அவரோட பிடிவாதத்தால் அவளை அவர் வழிக்கு வர வச்சிட்டாரு.....அதன் பிறகு ஊர் மெச்சும் படி என் மகளை கல்யாணமும் பண்ணாரு.......ஆனா அவன் விரும்பியது என் மகளை மட்டும் தான்..... அவ இந்த மாதிரி ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இருக்கான்னனு அவர் யார்க்கிட்டயும் சொல்லக்கூடாதுன்னு சொல்லி தான் என் மகளை கட்டிக்கிட்டாரு.....என் பெண் என்னை பார்ப்பதை அவர் அனுமதிக்கவே இல்ல..... ஏன் அவங்க கல்யாணத்த கூட நான் பாக்கல.....ஆனா அவருடைய பொண்டாட்டி மேல அவரு ரொம்ப காதலா தான் இருந்தாரு...ஆனால் காதலே கட்டாயப்படுத்தி வர வைக்க கூடாது இல்லையா......என் மகளுக்கு அவர் போட்ட ஒரு சில கண்டிஷன் பிடிக்காமல் போனதால கொஞ்சம் கொஞ்சமாக அவர்களின் மன வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டது.....அவர்கிட்ட சண்டை போட்டுட்டு என் மக என் கூடவே வந்து இங்கேயே தங்கிட்டா.....அப்போ தான்
விஜயகுமாரின் பிள்ளையை என் மகள் வயிற்றில் சுமப்பது அவளுக்கு தெரிந்தது.. ஆனால் எங்க தன் புருஷனுக்கு தெரிஞ்சா குழந்தையை அவரோடு எடுத்துப்பாருன்னு நினைத்து அவர் கிட்ட அவ சொல்லவே இல்ல......விஜயகுமார் என் மகளை விட்டுட்டு வேற பெண் கூட பழக ஆரம்பிச்சாரு.... அவரோட கெட்ட நேரம் அவருக்கு ஒரு விபத்துல முதுகில் அடிபட்டு அவரால இனிமே ஒரு பிள்ளைக்கு அப்பாவாக முடியாதுன்னு தெரிஞ்சிகிட்ட அந்த பொண்ணு அவரை விட்டு போயிட்டா..... அதோட ஊர் முழுக்க ரெண்டு பொண்டாட்டியையும் துரத்தி விட்டுட்டான் இவன் ஆம்பளையே இல்ல போலன்னு அவரை ஏளனம் பேசியதால அவர் மறுபடியும் என் மகளை அழைச்சிட்டு போக இங்க வந்தாரு......ஆனா என் மகள் அவங்களுக்கு பிறந்த ஐந்து வயது மகனோட என்னை விட்டு வரவே மாட்டேன்னு சொன்ன தால அவரு ரொம்ப கோவப்பட்டு எங்களை ரொம்ப தொல்லை பண்ணாரு..எதுக்கும் என் மகள் அசைந்து தரவே இல்ல.... என் மகள் என் பேரனை படிக்க வைக்க வேலைக்கு போனாள்....ஆனால் அந்த இடத்திலயும் இந்த ஆளு என் பெண்ணை வாழ விடல.....அவரு என் பேரனை கேட்டு என் மகளை ரொம்ப தொல்லை தந்தாரு.... அன்னைக்கு என் பேரனின் பத்து வயது பிறந்தநாள்... என் மகள் அவனுக்கு இளநீர் பாயசம் வச்சி தரனும் ஆசை பட்டா....அமர் ஸ்கூல் போயிட்டுக்கு வந்ததும் அவனை அவ கோவிலுக்கு அழைச்சிட்டு போகணும்னு சொல்லிக்கிட்டு இருந்தா.... நான் என் பேரனை ஸ்கூல்ல இருந்து அழைச்சிட்டு வந்தேன்... நாங்க வரும் போது இந்த வீடே எரிந்து தரை மட்டமா இருந்துச்சு.... என் மகள் உடல் கருகி அதோ அந்த இடத்துல பிணமா தான் இருந்தா....இந்த காட்சியை பார்த்த என் பேரன் அதே இடத்தில் பிரேமை பிடித்தது போல நின்று இருந்தவனை இவனோட அப்பா விஜயகுமார் கதற கதற தூக்கிட்டு போனாரு.... என்னால ஒண்ணுமே பண்ண முடியல.... பணம் அதிகாரம் எல்லாமே அவுங்க கால் அடியில் இருந்துச்சு.... என் மகளுக்கு இறுதி சடங்கு கூட என் பேரன் கையால் செய்ய முடியாமல் நான் தவிச்ச தவிப்பு எந்த ஒரு அம்மாவுக்கும் வர கூடாது.......

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Wo Geschichten leben. Entdecke jetzt