((வார இறுதி கதை களம்))
சித்ரா - ஏன் அமரா உன்னை தவிர இன்னொருவன் கையாள நான் தாலி கட்டிப்பேன்னு நினைச்சியா நீ....???
என்று கேட்டவள் கண்களை துடைத்தப்படி அமராவதியை அழைத்து கொண்டு அவள் குடிசைக்கு செல்ல... அமரனோ அவளையே பார்த்து கொண்டு இருந்தவன் தோளில் கை வைத்த குரேஷி
டேய் சித்ராவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல டா..
என்று குரேஷி சொன்னதும் அமரனின் மனதில் ஏதேதோ எண்ணங்கள் தோன்ற ஆரம்பிக்க
டேய் என்ன டா சொல்ற... சித்ராவுக்கு கல்யாணம் ஆகலயா.... அப்போ.... அப்போ அமராவதி பாப்பா யாரு டா..... சித்ரா வயற்றில் இப்போ குழந்தை இருக்கே அதுக்கு காரணம்.... டேய் என்ன டா ஆச்சு அவளுக்கு
என்று அமரன் வாசலில் நின்று கண்கள் கலங்கிய ப்படி குரேஷியின் சட்டையை பிடித்து உளுக்கியவன் நிலை தடு மாறி கீழே விழ.... குரேஷி அவனை கை தாங்களாக அழைத்து சென்று சோபாவில் அமர வைத்தவன்
இங்க பாரு அமரா.... உன் வாழ்க்கையில நீ சித்ராவை மறந்தியா இல்லையான்னு எல்லாம் எனக்கு தெரியாது.. ஆனா சித்ரா வாழ்க்கையில நீ இனி இல்லன்னு அவ சொல்லாம சொல்லிட்டா....வேணா டா இனி நீ அவளை பற்றி எதையும் யோசிக்காத.... நீ வந்த வேலை என்னவோ அதை மட்டும் பாரு
என்று குரேஷி சொன்னவன்... சித்ராவிற்கு என்ன நடந்தது என்று செந்தாமரையிடம் கேட்டு தெரிந்து கொண்ட விவரத்தை எதையும் அமரனிடம் சொல்லாமல் அவன் அறைக்கு சென்று விட.... அமரனோ பைத்தியம் பிடித்தது போல நடு வீட்டில் அமர்ந்து இருந்தவன் கண்களில் கண்ணீர் மட்டுமே பெருகி இருக்க....
மறுபக்கம் குடிசையில் சித்ரா அமராவதிக்கு இரவு உணவை ஊட்டி கொண்டு இருக்க...அமராவதி - அம்மா.....
சித்ரா -
அமராவதி - அம்மா உன்னை தான்
சித்ரா - சொல்லு அமரா
அமராவதி - நீயும் சாப்பிடு
சித்ரா - நான் அப்புறம் சாப்பிடுறேன் டா... நீ சாப்பிடு
அமராவதி - ஏன் மா அந்த sir தான் நீ காதலிச்ச அமரனா...
YOU ARE READING
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fanfictionகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.