பாகம் 37

166 25 15
                                    

🔱அமரனின் சித்ராம்பிக்கை🔱

💙பாகம் 37

அமரன் அமராவதியை பள்ளியில் இறக்கி விட்டவன் மீண்டும் வீடு திரும்ப...

அமரனின் கெஸ்ட் ஹவுஸ் வாசலில் ஒரு பெரிய கார் நிற்பதை பார்த்து கொண்டே உள்ளே வந்தவன்...ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்த வளர்ப்புத் தாய் ஜானகியை பார்த்த அமரனின் கண்கள் அகலமாக விரிய..

ஜானகி - அமரா ............

அமரன் - அம்மா ..............

என்று அழைத்தவன் ஜானகியை கட்டி அணைத்து அழ தொடங்க..ஜானகியும் கண்களில் கண்ணீருடன் அமரனை கட்டி அணைத்து அவன் நெற்றியில் இதழ் பதிதத்தவர் உரிமையாக அவன் கன்னத்தில் சட்டென்று அறைந்ததும் அமரன் சிரித்தவன்..

வயசானாலும் ஜானகி அம்மாவின் வலிமை குறையவே இல்ல

என்று அவன் கேட்டதும் அமரனின் வளர்ப்பு தாய் ஜானகி புன்முறுவலுடன்

ஆமா ஆமா உன்னுடைய இந்த பாசாங்கு பேச்சு எல்லாம் என்கிட்ட வேணா...நான் இருக்கேனா செத்தேனா என்ற கவலை கூட உனக்கு இல்லையே ..உன்னை வளர்த்த அம்மா என்ற அன்பு உனக்கு கொஞ்சம் கூட இல்லையா அமரா .........ஹ்ம் அதானே இத்தனை வருஷம் கடந்தும் இன்னும் உன் மௌவனம் மட்டுமே பல கேள்விக்கு விடையாக இருக்கும் பட்சத்தில்.. நான் உங்கிட்ட என்ன பேசி என்ன கேட்டு என்ன ஆகா போகுது ........ சரி நான் கிளம்புறேன்..

என்று கோவமாக சொன்னவரின் முன் சித்ரா கையில் குளிர்பானத்துடன் வந்தவள்..

அம்மா இருங்க இருங்க எங்க போறீங்க...இத முதல்ல குடிங்க

என்று சித்ரா சொன்னதும் அமரன் சித்ராவை பார்க்க ...

சித்ரா - அமரா இந்தா உன் கையாள உன் அம்மாவுக்கு ஜூஸ் குடு

ஜானகி - இல்ல மா வேணா.. துரை கையாள எனக்கு எதுவுமே வேணா

சித்ரா - ஏன் அப்படி எல்லாம் பேசுறீங்க...இந்தாங்க ஜூஸ் குடிச்சிட்டு நீங்க அமரன்கிட்ட பேசிகிட்டு இருங்க...நான் சாப்பாடு ரெடி பண்றேன்

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Where stories live. Discover now