💕அமரனின்🔱சித்ராம்பிக்கை💕
💕பாகம் 27💕
சித்ரா - பாப்பா நீ இங்கேயே அமரன் கூட இரு ...நான் போய் விசித்திரா அக்காவுடைய போட்டோவை எடுத்துட்டு வரேன்...
என்று சொன்ன சித்ரா.... அமராவதி பாப்பாவின் அம்மா விசித்ராவின் புகைப்படத்தை அமரனின் வீட்டிற்கு எடுத்து வந்தவள்....அதை ஒரு மேசை மேல் வைக்க...... அமரன் படையல் போட தேவையான சாப்பாட்டுடன் வந்தவன் அந்த புகைப்படத்தை பார்த்ததும் கண்கள் பிதுங்கி உறைந்து போய் நிற்க்க
சித்ரா - என்ன அமரா என்னாச்சு ஏன் அப்படி பாக்குற
அமரன் - சித்ரா இந்த போட்டோல இருக்கிற பொண்ண நான் பாத்திருக்கேன்
சித்ரா - என்ன சொல்ற அமரா...இவங்கள பார்த்து இருக்கியா?எங்க பார்த்து இருக்க..
அமரன் - சரியா ஞாபகத்துக்கு வரல ஆனா நான் இவங்கள பார்த்து இருக்கேன்
அமராவதி - என்ன சார் சொல்றீங்க நீங்க என்னோட விசித்ரா அம்மாவை பார்த்து இருக்கீங்களா?
அமரன் - ஆமா பாப்பா நான் இவங்கள பார்த்து இருக்கேன்...
அமராவதி - எங்க சார் பார்த்தீங்க...
அமரன் - அது தாம்மா சரியா நினைவுக்கு வரல...ஆனா இவங்கள எங்கேயோ பார்த்த ஞாபகம் இருக்கு....
அமராவதி - சரி சரி சார் ரொம்ப யோசிக்காதீங்க நீங்க யோசிச்சு பதில் சொல்றதுக்குள்ள எங்க அம்மாவுக்கு பசி போயிடும் போல...சித்ரா அம்மா வாங்க விசித்ரா அம்மாவுக்கு படையல் போட்டுட்டு நம்மளும் சாப்பிடலாம்
என்று குழந்தை அமராவதி சொல்ல...சித்ரா விசித்ராவின் புகைப்படத்திற்கு பூ போட்டு ஆரத்தி காட்டி படையில் வைத்து இவர்களும் அந்த சாப்பாட்டை சாப்பிட....அன்றைய இரவு அமரனின் கெஸ்ட் ஹவுஸிலேயே அமராவதியும் சித்ராவும் ஒரு அறையில் படுத்து இருக்க... அமரன் இவர்களுக்கு தேவையான விஷயங்களை எல்லாம் பார்த்து பார்த்து செய்து கொண்டிருந்த சமயம்...அமரனுக்கு கைபேசி வாயிலாக அவன் பணிபுரியும் இடத்திலிருந்து அழைப்பு வந்ததால் அமரன் செல்போனை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல..
KAMU SEDANG MEMBACA
💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙
Fiksi Penggemarகோடிஸ்வரர் விஜயகுமாரின் புதல்வன் அமரன்.. அன்றாட உணவிற்காக கிடைத்த வேலையை நேர்மையுடன் பார்க்கும் நாயகி சித்ராம்பிகை @ சித்து ... இயல்பான கதை களமே.