பாகம் 15

245 33 32
                                    

ac 15

ஐயோ சித்ரா எழுந்துடு சித்ரா என்னை பாரு.....

என்று அமரன் கதறும் சத்தம் கேட்டு வாசலில் இருந்து குரேஷி செந்தாமரை மற்றும் சிறுமி அமராவதி வீட்டுக்குள் ஓடி வர.....

குரேஷி - டேய் என்னடா ஆச்சு.... ஐயோ சித்ரா.....

அமராவதி - அம்மா.... அம்மாக்கு என்னாச்சு... அம்மா எழுந்துடு மா

செந்தாமரை - ஐயோ என் மக.....என் மகளுக்கு என்னாச்சு

அமரன் - சித்ரா படிக்கட்டில் இருந்து விழுந்துட்டா டா... உடனே ஹாஸ்பிடல்க்கு போகணும் வண்டியை எடு டா...

என்று அமரன் சொன்னதும் குரேஷி காரை எடுக்க.... அமராவதி அழுது கொண்டே இருந்தவள் சித்ராவின் கன்னத்தில் தட்டியப்படி

அமராவதி - அம்மா எழுத்துடு மா..

அமரன் - பாப்பா சித்ராவுக்கு ஒன்னும் ஆகாது நீ பயப்புடாத....

என்று சொன்னவன் சித்ராவை தன் கரங்களால் ஏந்தியப்படி காருக்குள் கடத்தியவன் அவளை மடியில் தாங்கி இருக்க.....

குரேஷி - தாத்தா நீங்க இங்கேயே இருங்க நாங்க பாத்துக்குறோம்

செந்தாமரை - தம்பி என் மகளுக்கு என்னாச்சு

குரேஷி - தாத்தா நான் ஹாஸ்பிடளுக்கு போயிட்டு உங்களுக்கு போன் பண்றேன்

அமராவதி - நானும் அம்மாகூட வரேன்.... என்னையும் அழைச்சிட்டு போங்க

என்று அமராவதி அடம் பிடிக்க... வேறு வழி இல்லாமல் இவர்கள் சிறுமியுடன் மருத்துவமனைக்கு செல்ல..... வழி எல்லாம் அமரனும் அமராவதியும் சித்ராவுக்காக அழுது கொண்டு வர.....சில நிமிடங்கள் கடந்த நிலையில் குரேஷி விரட்டிய கார் மருத்துவமனையை சென்றடைய..அங்கே ஆறு மாத கருவுற்ற நிலையில் மயங்கி இருந்த சித்ராவிற்கு சிகிச்சை மேற்கொள்ள.....சில நிமிட மணி துளிகள் கடந்த நிலையில் சித்ராவை பரிசோதித்த மருதவர் வெளியே வர

அமரன் - டாக்டர் என் சித்ரா.... என் சித்ராவுக்கு ஏதும் problem இல்லையே

💙AC💙அமரனின்🔱சித்ராம்பிகை💙Onde histórias criam vida. Descubra agora