1 மாமல்லனும் பரஞ்சோதியும்

6.2K 88 34
                                    

1 மாமல்லனும் பரஞ்சோதியும்

சென்னை விமான நிலையம் கொதிப்படைந்தது. தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, சொந்த மண்ணில் கால் பதிக்க இருக்கிறான் மாமல்லன்... ஏர்டாக் மொபைல் கம்பெனியின் முதலாளி. நேரத்தை கடைப்பிடிப்பதில் மாமல்லன் எவ்வளவு கண்டிப்பானவன் என்பதை நன்கறிந்த அவனுடைய நண்பனான பரஞ்ஜோதி, தங்களது மதுரை கிளைக்கு  செல்லவிருக்கும் மாமல்லனுக்கு, அங்கு தேவையான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டு அவனுக்காக காத்திருந்தான். ஐரோப்பாவிலிருந்து திரும்பும் மாமல்லனுக்கு, ஓய்வெடுக்க கூட நேரமில்லை.

*மாமல்லன், பரஞ்சோதி* என்ற பெயர்கள் எதேச்சையாய் அமைந்தது அல்ல. அவர்களுடைய அம்மாக்கள் இருவரும் பள்ளிக்கால தோழிகள். அமரர் கல்கியின் எழுத்துக்களால் கவரப்பட்டவர்கள். அவருடைய என்றும் அழியா காவியமான *சிவகாமியின் சபதத்தால்* ஏற்பட்ட தாக்கத்தில், தன் மகனுக்கு, நரசிம்ம வர்ம பல்லவ சக்கரவர்த்தியின் மற்றொரு பெயரான, மாமல்லனை சூட்டினார் மாமல்லனின் அம்மா. அதைத் தெரிந்து கொண்ட பரஞ்சோதியின் அம்மா, தன் மகனுக்கு மாமல்லரின் உயிர் தோழனான பரஞ்சோதியின் பெயரை வைத்தார். அவர்கள் அந்த பெயரை தேர்ந்தெடுத்த நேரமோ என்னவோ, மாமல்லனும், பரஞ்சோதியும், உயிர் நண்பர்களாகி போனார்கள்.

இதோ வந்து விட்டான் மாமல்லன்... பார்ப்பவர் மனதை கவரக்கூடிய இளம் தொழிலதிபர். பார்ப்பவர் யாரும் தங்கள் கண்களை அவன் மீதிருந்து அவ்வளவு எளிதாய் அகற்றி விட முடியாது. அப்படி ஒருவர் செய்கிறார் என்றால் அவர் சுய கட்டுப்பாடு மிக்கவராய் இருக்க வேண்டும். இதுவரை அப்படிப்பட்ட சுயகட்டுப்பாடு உடைய யாரையும் அவன் கடந்திருக்கவில்லை. பரஞ்சோதியின் அருகில் வந்த மாமல்லன் தன் நண்பனை உறுதியான பார்வை பார்த்து, லேசாய் புன்னகைத்தான்.

"வெல்கம் பேக் பட்டி..." என்றான் பரஞ்சோதி.

"எப்படி இருக்க?"

"உன்னை பாக்காம வாடிப்போய் இருந்த என்னோட மனசு, உன்னை பார்த்த உடனே மலர்ந்திடுச்சு"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Место, где живут истории. Откройте их для себя