47 ஆபத்தின் விளிம்பில்...
தன் அணைப்பில் இருந்த இளந்தென்றலின் தலையை வருடி கொடுத்து, உச்சி முகர்ந்தான் மாமல்லன். இளந்தென்றல் தன்னை அவனிடம் அர்ப்பணித்து விட்டாள் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அதுவும் ஊரறிய திருமணம் நடப்பதற்கு முன். அது வெறும் காதல் மட்டும் அல்ல, அவள், அவன் மீது கொண்டிருந்த நம்பிக்கை... தன் வாழ்வில் அவன் எப்பொழுதும் வேண்டும் என்று நினைத்த அதே நம்பிக்கை. அதை எண்ணும் போது அவனுக்கு பெருமையாக இருந்தது. தன் அம்மாவிற்கு மனதார நன்றி கூறினான், இளந்தென்றல் தன் வாழ்வில் வர காரணமாய் இருந்ததற்காக.
"தென்றல்... " என்று அவள் பெயரை ரகசியமாய் உச்சரித்தான்"
"ம்ம்ம்ம்?"
"வீட்டுக்கு போற எண்ணம் இல்லையா?"
"சாயங்காலம் வரைக்கும் டைம் இருக்கு"
அதைக் கேட்டு புன்னகைத்த மாமல்லன்,
"ரிஸ்க் எடுக்காத தென்றல். உன் கூட இருக்கிறவன் ரொம்ப மோசமானவன். நீ கொடுக்கிற சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்க நினைப்பான். அவன் அதைத்தான் எதிர்பார்த்துக்கிட்டு இருக்கான்" என்றான் கிண்டலாய்.
அவனைப் பட்டென்று ஒரு அடி போட்டாள் இளந்தென்றல். சிரித்தபடி அவளை இறுக்கமாய் அமைத்துக் கொண்டான் மாமல்லன்.
"தென்றல் கேர்லெஸ்ஸா இருக்காத. அம்மாவும் பாட்டியும் உன்னை தேட போறாங்க"
"அவங்க தேட மாட்டாங்க. நான் சொல்லிட்டு தான் வந்திருக்கேன்"
"வீட்டுக்கு போ தென்றல்"
"ஏன் என்னை அனுப்புறதிலேயே இருக்கீங்க?" என்றாள் முகத்தை சோகமாய் வைத்துக் கொண்டு.
"சின்ன குழந்தை மாதிரி பண்ணாத. நம்மளால ஏற்கனவே அவங்களுக்கு டென்ஷன். அவங்கள மேல மேல கஷ்டப்படுத்த நான் விரும்பல"
"சரி, அப்படின்னா வந்து சாப்பிடுங்க"
ஒரு தட்டில் சாப்பாடு போட்டு அதை அவனிடம் நீட்டினாள். ஒன்றும் கூறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மாமல்லன். அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்ட அவள், அதை அவனுக்கு ஊட்டி விட்டாள். வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த அவள் சமைத்த உணவை, ரசித்து சாப்பிட்டான் மாமல்லன்.
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...