48 நினைவுகள்
பரஞ்சோதியின் கைபேசி எண்ணை ட்ராக் செய்த போலீசார், அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். ஷீலாவை தேடி, அந்த பெரிய பள்ளத்தில் இறங்கினார்கள். அவள் அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்தாள். அவளது கால் முறிந்து போயிருந்தது. அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களை போலீசார் அழைத்துச் சென்றனர். ஷீலாவின் வார்த்தைகளை நினைவு கூர்ந்தான் அழகன், * மாமல்லன், பரஞ்சோதி கைல மாட்டுறத்தை விட, சாவறது எவ்வளவோ மேல்* அவர்களது கைகளில் மாட்டாமல் செத்து விடும் அளவிற்கு அவர்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கவில்லை. நரகம் எப்படி இருக்கும் என்பதை, வாழும் போதே தெரிந்து கொள்ளப் போகிறார்கள் அவர்கள்.
"நம்ம கிளம்பலாம் மல்லா" என்றான் பரஞ்சோதி.
"நம்ம தென்றலை வீட்ல விடனும்"
"நம்ம இல்ல. நான் விட்டுட்டு வரேன்"
"சரி. என்னை வீட்ல விட்டுட்டு, அவளை கூட்டிகிட்டு போய் விட்டுட்டு வா"
தென்றலை பார்த்த அவன்,
"உன் ஃபிரண்ட் காவியாவை கூட்டிக்கிட்டு போ. அப்ப தான் பாட்டியும் அம்மாவும் சந்தேகப்படாம இருப்பாங்க. ( பரஞ்சோதியை நோக்கி திரும்பிய அவன்) காவியாவை பிக்கப் பண்ணி, மறுபடியும் அவங்க வீட்ல டிராப் பண்ணிடு" என்றான.
"ஓகே"
"உங்க ஃபோனை குடுங்க. அவங்க என் ஃபோனை பிடிங்கி தூக்கி போட்டுட்டாங்க" என்றாள் தென்றல்.
"நான் என்னோட ஃபோனை கொண்டு வரல. பரா உன்னோட ஃபோனை கொடு" என்றான் மாமல்லன்.
தனது கைபேசியை கொடுத்தான் பரஞ்ஜோதி.
"காவியாவுக்கு ஃபோன் பண்ணு" என்றான் மாமல்லன்.
காவியாவிற்கு ஃபோன் செய்து அவளை தயாராகி இருக்கும்படி கூறினாள் தென்றல். அவளுடைய பெற்றோர் இன்னும் வீடு திரும்பாததால், உடனே ஒப்புக்கொண்டாள் காவியா.
காரை ஸ்டார்ட் செய்தான் பரஞ்ஜோதி. இளந்தென்றலுடன் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டு, தன் கைவிரல்களை அவளுடன் கோர்த்துக் கொண்டான் மாமல்லன்.
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...