30 நீண்ட பயணம்...
இசக்கி சொன்ன கோயிலை இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வந்தடைந்தாள் இளந்தென்றல். அவளுக்காக அங்கு புரோகிதர் காத்திருந்தார்.
"இசக்கி சொன்னது உங்களை பத்தி தானா?" என்றார்.
"ஆமாம் சாமி. பூஜை ஆரம்பிக்கலாமா?"
"இல்லம்மா. இப்ப தான் இசக்கி ஃபோன் பண்ணாரு. உங்க பாட்டி ஊர்ல இருந்து ஃபோன் பண்ணி இருந்தாங்களாம். உங்க அப்பாவுக்கு திதி இன்னைக்கு இல்லையாம். அதுக்கு இன்னும் ரெண்டு வாரம் இருக்காம்"
"ஆனா, நேத்து என்கிட்ட இன்னைக்குனு சொன்னாங்களே..."
"நீங்க வேணா உங்க பாட்டிகிட்ட ஃபோன் பண்ணி பேசி பாருங்களேன்"
"என்கிட்ட ஃபோன் இல்ல சாமி"
"இந்தாங்க. என்னோட ஃபோன்ல இருந்து பேசுங்க" தன் கைபேசியை அவளிடம் கொடுத்தார்.
வடிவாம்பாளுக்கு ஃபோன் செய்தாள் இளந்தென்றல்.
"நான் தான் பேசுறேன் பாட்டி"
"மன்னிச்சிடுடா கண்ணு... நம்ம கோயில் ஐயர், திதியை தப்பா சொல்லிட்டாராம். அது பிரண்டு வருதுன்னு சொன்னாரு. உங்க அப்பாவுடைய திதி வளர்பிறையில் வராதாம், அது தேய்பிறையில் தான் வரணும்னு சொல்றாரு."
"சரிங்க பாட்டி, பரவாயில்ல விடுங்க. நான் வீட்டுக்கு போறேன்"
அழைப்பை துண்டித்து விட்டு, கைபேசியை பூசாரியிடம் கொடுத்தாள்.
"மன்னிச்சிடுங்க சாமி. உங்களை வேற டிஸ்டர்ப் பண்ணிட்டோம்"
"பரவாயில்லை மா... இன்னிக்கு சரியான திதி இல்லன்னா, அதுக்கு நீங்க என்ன செய்வீங்க? வந்தது வந்துட்டீங்க சாமி கும்பிட்டு போங்க"
சரி என்று அவள் தலையசைக்க, தீபாராதனை காட்டினார் பூசாரி. கண்களை மூடி, ஆதிபுரீஸ்வரரையும், புவனமா தேவியையும் மனதார வேண்டினாள் இளந்தென்றல்.
"என்னோட வாழ்க்கையில என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு உங்களுக்கு தெரியும். இதெல்லாம் ஏன் நடக்குதுன்னு எனக்கு புரியல. எனக்கு எப்பவும் துணையா இருங்க. எனக்கு வேண்டியதை எனக்கு கொடுங்க. நான் ரொம்ப குழம்பி போய் இருக்கேன். என் மனசை தெளிய வையுங்க"
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...