28 மாறுதல்...

1K 64 9
                                    

28 மாறுதல்...

மறுநாள் காலை

தூக்கத்திலிருந்து கண் விழித்த இளந்தென்றல், தன் உடலை நெட்டி முறித்தாள். தன் அறையின் சோபாவில் மாமல்லன் அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்ததை பார்த்து, அப்படியே சிலை போல் நின்றாள். அவனது கழுத்து, வசதியற்ற நிலையில் சரிந்திருந்ததை பார்த்த பொழுது, அவளுக்கு ஆச்சரியமாய் போனது. இரவு முழுவதும், இப்படியேவா அவன் உறங்கிக் கொண்டிருந்தான்? அவனை, எது அங்கு வர வைத்தது என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது. அவளது இதழ்களில் மெல்லிய புன்னகை இழையோடியது. தன்னுடைய அனுமதி இன்றி தன் அறையில் உறங்கியதற்காக அவன் மீது அவளுக்கு கோபம் வரவில்லை, அது ஏன் என்றும் அவளுக்கு புரியவில்லை. அவனது எண்ணம் தவறாக இருக்க முடியாது என்ற ஆணித்தரமான எண்ணம், அவளது மனதில், அவளை அறியாமலேயே ஊன்றி விட்டிருந்தது.

அப்பொழுது, மாமல்லனும் தூக்கத்தில் இருந்து கண் விழித்தான்.

"தென்றல், இப்போ உனக்கு எப்படி இருக்கு?" என்றான் தூக்கம் கலையாத குரலில்.

"நல்லா இருக்கேன்..."

அவள் கட்டிலை விட்டு கீழே இறங்கினாள். அவளுக்கு உதவும் நோக்கில் அவள் அருகே சென்ற அவனை, தன் கையைக் காட்டி தடுத்து நிறுத்தினாள் இளந்தென்றல். அப்படியே நின்ற மாமல்லன், *மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிவிட்டதோ?* என்று எண்ணினான்.

"நான் உனக்கு ஹெல்ப் பண்ணலாமான்னு தான்..." என்று தன் செயலை நியாயப்படுத்த முயன்றான் அவன்.  

"தெரியும். ஆனா, நான் குளிக்கிறதுக்கு முன்னாடி நீங்க என்னை தொடக்கூடாது..." என்றாள், அவனைப் பார்க்காமல் தயக்கத்துடன்.

"ஏன்?" என்றான் குழப்பத்துடன்.

"அது என்னோட வழக்கம். நான் ரொம்ப வருஷமா ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்கேன்"

"நம்ம இருபத்தி ஒன்னாம் நூற்றாண்டில் இருக்கோம்... இன்னுமா இதையெல்லாம் நம்பிகிட்டு, ஃபாலோ பண்ணிக்கிட்டு இருக்க?"

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now