22 கிணற்று தண்ணீர்...
தன்னுடைய கைபேசிக்கு வந்த அழைப்பை ஏற்றான் பரஞ்சோதி. அந்த அழைப்பு, அவன் இளந்தென்றலை பற்றி விசாரிப்பதற்காக நியமித்திருந்த ஆளிடமிருந்து வந்தது.
"சொல்லுங்க தமிழ், என்ன விஷயம்?"
"சார், இளந்தென்றல் மேடத்தை பத்தி ரொம்ப முக்கியமான ஒரு விஷயம் கிடைச்சிருக்கு"
"என்ன விஷயம்?" என்றான் ஆர்வமாக.
"இளந்தென்றல் மேடத்தோட பாட்டி, அவங்களுக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சிருக்காங்க"
"என்னது...??? வரன் பாக்க ஆரம்பிச்சிருக்காங்களா? அப்படின்னா, அவங்களுக்கு ஏற்கனவே நிச்சயதார்த்தம் ஆச்சுன்னு சொன்னது?"
"இளந்தென்றல் மேடம்க்கு, அவங்க அம்மாவுடைய ஃபிரண்ட் மகன் கூட, அவங்க சின்ன வயசுல இருந்த போது நிச்சயதார்த்தம் நடந்திருக்கு. அவங்களுக்காக, இளந்தென்றல் மேடம் பதினஞ்சு வருஷமா காத்திருக்கிறதுல, அவங்க பாட்டிக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லன்னு தெரியுது. ஏன்னா, இப்போ அவங்க எங்க இருக்காங்கன்னே இளந்தென்றல் மேடம்க்கு தெரியலையாம். அதனால, அவங்க பாட்டி, முழுமூச்சா அவங்க கல்யாணத்தை முடிக்கணும்னு நினைக்கிறாங்க"
"ஓகே, ஃபைன். ஆனா, அவங்களுடைய நிச்சயதார்த்தம் யார் கூட நடந்ததுன்னு கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க"
"கண்டிப்பா செய்றேன் சார். ஆனா, அதுக்கு கொஞ்சம் டைம் ஆகும் போல தெரியுது. ஏன்னா, அவங்க பாட்டி அதை பத்தி யார்கிட்டயும் பேசவே விரும்ப மாட்டேங்கிறாங்க. இளந்தென்றல் மேடத்துக்கும், அவங்க பாட்டிக்கும் இந்த விஷயத்துல முரண்பாடு தான் இருக்கு"
"புரியுது. உங்களுக்கு இது சம்பந்தமா ஏதாவது விஷயம் தெரிஞ்சா, எனக்கு தெரியப்படுத்துங்க"
"உடனே செய்றேன் சார்" அழைப்பை துண்டித்தான் தமிழ்.
இளந்தென்றலின் இளவயது நிச்சயதார்த்தத்தை பற்றி தெரிந்து கொண்ட பரஞ்சோதிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இதெல்லாம் என்ன? எங்கு இருக்கிறான் என்று தெரியாத ஒருவனுக்காக இத்தனை வருடமாய் காத்திருப்பதா? தெரியாத ஒருவனுக்காகவா அவள் மாமல்லனை வேண்டாம் என்று கூறுகிறாள்? என்ன முட்டாள் தனம் இது? ஆனால், அவள் இப்பொழுதெல்லாம் மாமல்லனிடம் கடுமையாக நடந்து கொள்வதில்லை என்று தெரிகிறது. அவளுடைய நடவடிக்கைகளில் இருந்து அதை புரிந்து கொண்டிருந்தான் பரஞ்சோதி. இதற்கு அவன் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற தன்னுடைய நிலையில் மேலும் உறுதியானான் பரஞ்ஜோதி.
CZYTASZ
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...