14 வீட்டு சாப்பாடு

1.1K 64 11
                                    

14 வீட்டு சாப்பாடு

இரவு உணவுக்காக தரைதளம் வந்த மாமல்லன், புதிதாய் ஒரு வாசத்தை உணர்ந்தான். அந்த வாசம், நிச்சயம் அவன் வீட்டு சமையலுக்கு சொந்தமானதல்ல. நேராக சமையலறைக்குச் சென்றவன், அங்கு இளந்தென்றல் சமைத்துக் கொண்டிருப்பதை பார்த்து திகைத்து நின்றான். மற்றொரு பக்கம் இசக்கியும் சமைத்துக் கொண்டிருந்தார்.

"நீ இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்க? யார் உன்னை இதையெல்லாம் செய்ய சொன்னது? இசக்கி அண்ணா, எதுக்காக அவளை சமைக்க விடுறீங்க?" என்றான்.

"நானா தான் சமைக்கிறேன். அவர் ஒன்னும் சொல்லல" என்றாள் இளந்தென்றல்.

மாமல்லன் இசக்கியை பார்க்க, அவர் அங்கிருந்து சென்றார்.

"உனக்கு என்ன வேணும்னு சொல்லியிருந்தா, இசக்கி அண்ணன் சமைச்சிக் கொடுத்திருப்பாரே"

"என்னை ஒரு வேலையும் செய்யாம இருக்க சொல்றீங்களா? மூணு மாசத்துக்கு, மூணு வேலையும் சாப்பிட்டுகிட்டு சும்மா உட்கார்ந்து இருக்க என்னால முடியாது. எனக்கு வேண்டியதை நானே சமச்சுக்குவேன். அதுக்கு அனுமதிக்க முடியாதுன்னா, என்னை திருப்பி அனுப்பிடுங்க" என்றாள் கராராக.

"உன்னை எந்த லிஸ்ட்ல வைக்கிறதுன்னே எனக்கு தெரியல. நீ இவ்வளவு சாதாரணமா சமைக்க ஆரம்பிப்பேன்னு நான் நினைக்கல" என்றான் சிரித்தபடி.

"எல்லா நேரமும் நமக்கு நல்லதே தான் நடக்கும்னு நம்ம எதிர்பார்க்க முடியாது. நடக்கிறது எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சிக்க வேண்டியது தான். அது மட்டுமில்லாம, ( மாமல்லனை சுட்டிக்காட்டி ) எந்த நபரோ, இல்ல சூழ்நிலையோ என்னை அடிச்சு உட்கார வைக்க முடியாது. எல்லாம் விதிப்படி நடக்கும் போது, அதை நினைச்சு, அழுது புலம்பி, என்ன பிரயோஜனம் இருக்கு? நடக்கிறது நடந்து தானே தீரும்?"

"உன்னை எனக்கு மேலமேல பிடிக்கிறதுக்கு ஏதாவது ஒரு காரணத்தை நீ கொடுத்துகிட்டே இருக்க... உன் தைரியத்தை நான் ரொம்ப ரசிக்கிறேன். எப்படியோ இங்க தங்க நீ ஒத்துக்கிட்டயே..."

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now