39 மீண்டும் மதுரைக்கே...
காபி தட்டுடன் நின்றிருந்த இளந்தென்றலின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை நன்றாகவே உணர முடிந்தது. சிறு நடை நடந்து அவர்களை நோக்கி வந்தாள் இளந்தென்றல்.
"எங்களுக்கு கல்யாணம் நடந்ததெல்லாம் உங்க திட்டப்படி தானா?" என்றாள் நம்ப முடியாமல்.
"தென்றல், அவன் அப்படி செஞ்சது எனக்காக..."
என்ற மாமல்லனை, மேலே பேச விடாமல் தன் கையை காட்டி தடுத்து நிறுத்தினாள் இளந்தென்றல், மாமல்லனை தவிப்பில் ஆழ்த்தி.
"என்னை மன்னிச்சிடுங்க தென்றல். எனக்கு தெரியும், நான் அப்படி செஞ்சிருக்க கூடாது. ஆனா, உங்க பாட்டி, உங்களுக்கு ரொம்ப தீவிரமா வரன் தேடிக்கிட்டு இருக்கிறதா கேள்விப்பட்டேன். உங்களை தடுத்து நிறுத்த எனக்கு வேற வழி தெரியல" என்றான் பரஞ்சோதி.
தன் தலையைப் பிடித்துக் கொண்டு கட்டிலின் மீது அமர்ந்தாள். அவள் முன் மண்டியிட்டு அமர்ந்த மாமல்லன்,
"தென்றல், நீ தேடிக்கிட்டு இருந்தது என்னை தானே..??? அவனுடைய செயலால நமக்கு எந்த மனசு கஷ்டமும் ஏற்படலையே... நமக்கு நல்லது தானே நடந்திருக்கு? எப்படி இருந்தாலும் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்து தானே இருக்கும்? என்னோட வாழ்க்கையில, உன்னோட தேவையை முழுசா உணர்ந்ததால தான் அவன் அப்படி செஞ்சான் தென்றல்..." என்றான் மாமல்லன் கெஞ்சலாக.
"ஏன் என்னோட வாழ்க்கையில மட்டும் எதுவுமே ஒரு தெளிவோட இருக்க மாட்டேங்குது? ஏன் எல்லாம் ஒரு குழப்பத்துடனேயே இருக்கு? உங்களை தண்டிக்கிறதா, இல்ல நன்றி சொல்றதான்னு எனக்கு புரியல..." என்றாள் சலிப்புடன் இளந்தென்றல்.
"அவனுக்கு நன்றி சொல்ற ஆப்ஷன் இருக்குன்னா... தயவு செய்து அதையே சூஸ் பண்ணு, தென்றல். அது நம்ம எல்லாருக்குமே சந்தோஷத்தை கொடுக்கும் இல்லையா? ப்ளீஸ்பா..." என்றான் மாமல்லன்.
"நீங்க எனக்கு நன்றி சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல தென்றல். என் ஃபிரண்ட் சந்தோஷமா இருக்கணும்னு தான் அதை நான் செஞ்சேன்"
ESTÁS LEYENDO
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
Ficción Generalவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...