40 உளவாளி
பாட்டிக்கு ஃபோன் செய்து, மாமல்லன் கூறிய அனைத்தையும் ஒப்பித்தாள் இளந்தென்றல். அவள் திரும்பி வரபோவதை எண்ணி புளிங்காங்கிதம் அடைந்தார் வடிவம்பாள்.
சிறிது நேரத்திற்கு பிறகு,
மாமல்லனுக்கு சிற்றுண்டியை எடுத்து வந்த இளந்தென்றல், அவன் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருப்பதை கவனித்தாள்.
"நீங்க வீட்டுக்கு வர லேட் ஆகுமா?" என்றாள்.
அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்த மாமல்லன்,
"என் பொண்டாட்டி என்னை இப்பவே மிஸ் பண்ண ஆரம்பிச்சிட்டா போல இருக்கு...?" என்றான்.
பதில் கூறாமல், உதடு கடித்து சிரித்தாள் இளந்தென்றல்.
"எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வர ட்ரை பண்றேன்"
"நாளைக்கு நான் மதுரைக்கு போறேன்"
"நாளைக்கு நான் உன் கூட இருக்கேன். சரியா?"
"நீங்க எப்ப மதுரைக்கு வருவீங்க?"
"இங்க இருக்கிற வேலைகளை முடிக்க எனக்கு கொஞ்சம் டைம் வேணும். இல்லன்னா நானும் நாளைக்கே உன் கூட கிளம்பி வந்து, அம்மாவையும், பாட்டியையும் பார்த்து பேசி உன்னை மறுபடியும் என் கூட கூட்டிட்டு வந்துருவேன். எல்லாத்துக்கும் மேல, மதுரையில எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதுக்காகவும் நான் வந்தாகணும்"
"வேலையா? எப்ப பாத்தாலும் இவருக்கு வேலை தான் முக்கியம். அதனால தான் பிசினஸ் மேனை கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்னு நினைச்சேன். என்னை விட இவருக்கு வேலை தான் முக்கியமா போச்சு" என்று மனதிற்குள் நினைத்தாள் இளந்தென்றல்.
"நீ ஏதாவது சொன்னியா?" என்றான் மாமல்லன்.
இல்லை என்று தலைகசைத்தாள் இளந்தென்றல்.
"ஜாக்கிரதையா இரு. சரியா...?"
"உங்க மீட்டிங்கை உங்களால போஸ்ட்போன் பண்ண முடியாதா?" என்றாள் தயங்கியபடி.
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...