15 கசப்பான கடந்த காலம்
வீட்டிலிருந்தே பணிபுரிய ஆரம்பித்தான் மாமல்லன். அவனுக்கு கிடைத்திருக்கும் மூன்று மாத கால அவகாசத்தை, அலுவலகம் சென்று வந்தால் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று உணர்ந்தான் அவன். இதற்கு முன், வீட்டில் இருக்க அவன் எப்போதும் பிரியப்பட்டதே இல்லை. ஆனால் இப்போது, அது சுவாரசியமான விஷயமாய் மாறிப்போனது அவனுக்கு இளந்தென்றலால்...! அவளை சீண்டி விட்டு வேடிக்கை பார்ப்பது அவனுக்கு பிடித்திருந்தது. ஆனால் இளந்தென்றல், இளந்தென்றல் தானே! அவள் எதற்கும் மசிந்து கொடுக்கவில்லை. அவனுக்கு எதிராய் விடாப்பிடியாய் நின்றாள்.
அன்று, மாமல்லனின் இல்லத்திற்கு வந்தான் பரஞ்ஜோதி, மாமல்லனிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச. உண்மையில் கூறப்போனால், அது ஒரு சாக்கு. அவன் அதை கைபேசியின் வாயிலாக கூட செய்திருக்க முடியும். மாமல்லனின் வீட்டில், இளந்தென்றலை மாமல்லனுடன் பார்க்க வேண்டும் அவனுக்கு. அவர்களுக்கிடையில் என்ன தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அவனுக்கு. அந்த வீட்டில், சகல உரிமையும் பரஞ்சோதிக்கு இருந்தது. அதனால், அந்த வீட்டின் ஒரு சாவியை எப்பொழுதும் வைத்திருந்தான் பரஞ்சோதி. அந்த கௌரவத்தை அவனுக்கு வழங்கியது மாமல்லன் தான் என்பதில் சந்தேகம் இல்லை. எப்பொழுது வேண்டுமானாலும் தன் வீட்டிற்கு வரும் உரிமையும் அவனுக்கு வழங்கியிருந்தான் மாமல்லன். வழக்கம் போல் கதவை தட்டாமல், மற்றொரு சாவியால் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தவன், அமைதியாய் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டான்.
மாமல்லனின் அறைக்கு செல்ல வேண்டும் என்று அவனுக்கு தோன்றவில்லை. அவன் பார்க்க விரும்பியது, அங்கு வந்திருந்த சிறப்பு விருந்தினரான இளந்தென்றலை தானே...! அவனது கண்கள் அவளை தேடிய வண்ணம் இருந்தது.
அவள் எங்கு சென்றாள்? இன்னும் தனது அறையை விட்டு அவள் வெளியே வரவில்லையோ? அறையை பூட்டிக் கொண்டு, நாளெல்லாம் உள்ளேயே அடைந்து கிடக்கிறாளோ? என்று எண்ணியபடி இங்குமங்கும் பார்த்துக் கொண்டிருந்தான்.
ŞİMDİ OKUDUĞUN
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
Genel Kurguவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...