40 வரன்
தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று, கோதையும் வடிவாம்பாளும் காட்டிய ஆர்வம், இளந்தென்றலுக்கு பயத்தையும், கவலையையும் தந்தது. தன்னால் முடியாத நிலையிலும், முடிந்தவற்றை செய்து கொண்டிருந்தார் கோதை. இளந்தென்றலின் அறைக்கு வந்த வடிவாம்பாள்,
"இன்னும் நீ தயாராகலையா? அவங்க எப்ப வேணாலும் வந்துடுவாங்க..." என்றார்.
"நான் அவங்களை பார்க்க விரும்பலை பாட்டி"
"என்னடி உளர? ஏன் நீ அவங்களை பார்க்க விரும்பல?"
என்ன கூறுவது என்று தெரியாமல் விழித்தாள் இளந்தென்றல். எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று அவளால் எப்படி கூற முடியும்?
"வாயை மூடிகிட்டு தயாராகு"
அவள் கையைப் பிடித்து இழுத்து, கண்ணாடியின் முன்னால் நிறுத்தி, அவள் கையில் சீப்பை திணித்தார். வேண்டா வெறுப்பாய் தயாரானாள் இளந்தென்றல்.
மாப்பிள்ளை வந்து சேர்ந்தவுடன், அவளை வெளியே வரச் சொல்லி அழைத்தார் வடிவாம்பாள். அவள் கையில் காப்பியை கொடுத்து, அவரிடம் கொடுக்கும்படி பணிக்கப்பட்டாள். காபி தட்டுடன் வரவேற்பறைக்கு வந்தாள் இளந்தென்றல். அவளது பார்வை தரையில் பதிந்திருந்தது. மாமல்லனின் மீது கடும் கோபத்தில் இருந்தாள் அவள். தனக்கு ஒரு கைபேசியையும் வழங்கிவிட்டு, அவள் ஃபோன் செய்த போது, எடுக்காமல் இருந்தால் என்ன அர்த்தம்? பிறகு எப்படி அவனிடம் பேசுவதாம்?
"அவருக்கு காப்பியை கொடு தென்றல்" என்றார் பாட்டி.
"காப்பில சக்கரை போடலையே?" என்ற குரலை கேட்டு திடுக்கிட்டு நிமிர்ந்தாள் இளந்தென்றல்.
கள்ள புன்னகையுடன் அமர்ந்திருந்த மாமல்லனை, வாயை பிளந்து கொண்டு, நம்ப முடியாமல் பார்த்து நின்றாள் அவள்.
"போடலை தம்பி. நீங்க தான் நேத்து இங்க வந்த போதே உங்களுக்கு சக்கரை வியாதி இருக்குன்னு சொன்னீங்களே" என்றார் பாட்டி.
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...