12 எதிர் பாராத திருப்பம்
தனக்கு முன்னால் நின்றிருந்த மனிதனைப் பார்த்து அடியோடு ஆட்டம் கண்டாள் இளந்தென்றல். ஒரு தூணில் சாய்ந்த படி, தன் கைகளை கட்டிக்கொண்டு, முகத்தில் எந்த பாவனையும் காட்டாமல், அவளை பார்த்துக் கொண்டு நின்றான் அவன். அவள் யாரிடமிருந்து தப்பி ஓடி வந்தாளோ, அவன் முன் தான் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை நம்ப முடியவில்லை இளந்தென்றலால்.
ஆம், அங்கு நின்றிருந்தவன் வேறு யாருமல்ல, நமது மாமல்லன் தான். அவன் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று அவளுக்கு புரியவில்லை. ஒருவேளை அவனும் அந்த வீட்டில் தான் வேலை செய்கிறானோ? அப்படி ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறான்? அவளாகவே ஆரம்பிக்கட்டும் என்று நினைக்கிறானோ?
"நீங்க இங்க என்ன செஞ்சுகிட்டு இருக்கீங்க?" என்றாள் வாய்க்குளர.
அவனிடமிருந்து அவளுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அவள் கேள்வியை கேட்டு, அங்கு வந்த அந்த வீட்டின் வேலையாள், கோபம் கொண்டான்.
"ஹலோ மேடம்... யார்கிட்ட உங்க குரலை உயர்த்தி பேசுறிங்க?" என்றான் காட்டமாக.
அவன் கோபத்தைக் கண்ட இளந்தென்றல் பின்வாங்கினாள். ஏன் இந்த மனிதன் இவ்வளவு கோபம் கொள்கிறான்? அப்படி என்ன அவள் தவறாக கேட்டு விட்டாள்?
அந்த வேலையாள் மீண்டும் ஏதோ சொல்ல போக, அங்கிருந்து அவனை செல்லும்படி ஜாடை காட்டினான் மாமல்லன். அதனால் ஆச்சரியமடைந்த வேலையாள், இளந்தென்றலை நோக்கி ஒரு விசித்திர பார்வை வீசிவிட்டு சென்றான்.
அவன் யாரென்று தெரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த இளந்தென்றலை பார்த்தபடி, தனது கைபேசியை வெளியில் எடுத்தான் மாமல்லன்.
"தென்றல் என் வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டா. அவங்க அம்மாவுக்கு தேவையான எல்லா வசதியும் சரியா கிடைக்குதான்னு செக் பண்ணிக்கோ. அவங்க ட்ரீட்மென்ட்ல எந்த தாமதமும் ஆகக்கூடாது. டாக்டர்ஸை கவனமா இருக்க சொல்லு. எவ்வளவு பணம் செலவானாலும் அதைப் பத்தி கவலை இல்ல" அவளது கண்களை பார்த்தபடி பேசினான் மாமல்லன்.
ESTÁS LEYENDO
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
Ficción Generalவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...