44 காதம்பரியின் மகன்

1K 63 13
                                    

44 காதம்பரியின் மகன்

தன் கரத்தை கோபமாய் பற்றி கொண்டு நின்ற மாமல்லனை பார்த்த கோதை, சங்கடத்திற்கு ஆளானார்.

ஆம் அங்கு வந்தது நமது மாமல்லன் தான். பாட்டி அவனை வீட்டிற்கு வரச் சொல்லி அழைத்திருந்தார் அல்லவா? அதற்காக வந்திருந்த அவன், கோதை கூறிய குற்றச்சாட்டுகளை கேட்டு அதிர்ச்சி அடைந்தான். இளந்தென்றல் தன் இல்லத்தில் தான் தங்கியிருந்தாள் என்ற விஷயம் எப்பொழுதுமே அவர்களுக்கு தெரியக்கூடாது என்று அவன் எண்ணியிருந்தான். ஆனால் நிலைமை அவன் கை மீறி சென்று விட்டிருந்தது. அவளை எப்படியும் காப்பாற்றி ஆக வேண்டும் என்று  அவனது மூளை துரிதமாய் வேலை செய்தது. இந்த பழியில் இருந்து இளந்தென்றலை  எப்படியும் மீட்டாக வேண்டும். எப்படியும் அவளை தலை குனிய விட்டு விடக் கூடாது. ஏனென்றால், இது முழுக்க முழுக்க அவனுடைய தவறு. அவளுக்கே தெரியாமல் அவளை அழைத்து வந்தது அவன் தானே. செய்யாத தவறுக்காக, அவள் அவமானப்பட கூடாது.

"நீங்க சொல்றது எதையும் கேட்க நான் தயாரா இல்ல. நான் ஏற்கனவே உங்களைப் பத்தி போதுமான அளவுக்கு கேட்டாச்சு" என்றார் கோதை.

"ஓ, அப்படியா? அதையெல்லாம் நீங்க யார்கிட்ட இருந்து கேட்டீங்க? உங்களுக்கு அந்த விஷயத்தை எல்லாம் சொன்ன நபர், உங்க மகளை விட ரொம்ப நம்பகமானவங்களா?"

அவன் கேட்ட கேள்வி கோதையின் வாயை அடைத்தது.

"உங்களுடைய நிலைமையை என்னால நல்லாவே புரிஞ்சிக்க முடியுது. உங்க மேல எந்த தப்பும் இல்ல..." என்ற மாமல்லன்,

சென்ற முறை இளந்தென்றலிடம் கூறியது போல், அவன் அம்மா எழுதிய கடிதத்தை கையோடு கொண்டு வந்திருந்தான். அதை எடுத்து கோதையிடம் கொடுத்தான்.

"இதை படிச்சு பாருங்க"

அன்புள்ள மல்லனுக்கு,

உன்னிடம் ஒரு உன் முக்கியமான விஷயம் பற்றி கூற வேண்டும். உனக்காக நான் ஒரு பெண்ணை பார்த்து வைத்திருக்கிறேன். அவள் என் தோழி கோதையின் மகள்... என் தங்கம். அவள் என் மருமகளாய் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். உனக்கும் அவளை நிச்சயம் பிடிக்கும். இந்த கடிதத்துடன் நானும் கோதையும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணைத்திருக்கிறேன். என் ஆசையை நீ நிறைவேற்றுவாய் என நம்புகிறேன்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now