3 தெய்வீக அழகு
மறுநாள்
அன்று, மாமல்லனுக்கு மிக கடுமையான வேலை பலு இருந்தது. அனைத்தையும் முடித்துக் கொண்டு அவன் வீட்டுக்கு புறப்பட பின் மாலை பொழுதாகிவிட்டது. மிகவும் களைப்பாக இருந்த அவன், வீட்டுக்கு சென்றவுடன் குளித்துவிட்டு ஓய்வெடுக்க வேண்டும் என்று எண்ணினான். அவன் ஒரு பேருந்து நிறுத்தத்தை கடந்த போது, அங்கு நின்று கொண்டிருந்த ஒரு பெண், மயங்கி விழுவதை கவனித்தான். அந்த பேருந்து நிறுத்தத்தில் அவளைத் தவிர வேறு பெண்கள் யாரும் இல்லை. அங்கு நின்றிருந்த மற்ற ஆண்களும் கண்ணியமானவர்களாக தெரியவில்லை. காரை நிறுத்திவிட்டு, காரில் இருந்த ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு, அந்தப் பெண்ணை நோக்கி ஓடினான் மாமல்லன்.
அந்தப் பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்தான்... அவளுக்கு தண்ணீர் புகட்டினான். ஆனால் அவளிடம் எந்த அசைவும் தென்படவில்லை. அவ்வளவு நேரம், மங்களாய் எரிந்து கொண்டிருந்த தெருவிளக்கு, திடீரென்று பளிச்சென்று சுடர் விட்டது. அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்த அவன் உறைந்து போனான். அவள் முகத்தில் தெய்வீக கலை சொட்டியது. அவளது முகம் களைப்பாய் தெரிந்த போதும் பேரழகாய் இருந்தாள். மாநிறத்திற்கும், சிவந்த நிறத்திற்கும் இடைப்பட்ட நிறத்தில் இருந்த அவள், எளிமையாகவும், அதே நேரம் வசீகரத்துடனும் இருந்தாள். அவள் முகத்தில், துளி கூட செயற்கை ஒப்பனை இல்லை. இயற்கையாகவே அழகாக இருந்த அந்தப் பெண், அவனை சட்டென்று கவர்ந்தாள். தனக்குள் என்ன நிகழ்கிறது என்பதே புரியவில்லை மாமல்லனுக்கு.
எதைப் பற்றியும் யோசிக்காமல், அந்த பெண்ணை தன் கையில் ஏந்தி சென்று, தன் காரில் அமர வைத்து, அருகில் இருந்த மருத்துவமனையை நோக்கி, வண்டியை செலுத்தினான். மருத்துவமனையை அடைந்த அவன், மீண்டும் அவளை தூக்கிக்கொண்டு சென்று, மருத்துவமனை படுக்கையில் கிடத்தினான், அவளை உள்ளே கொண்டு செல்ல அவனுக்கு வேறு வழிகள் இருந்த போதும்.
YOU ARE READING
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
General Fictionவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...