35 சிறப்பான போர்வை...
"என்ன தேடிக்கிட்டு இருக்க?" என்றான் மாமல்லன்.
திடீரென்று மாமல்லனின் குரலை கேட்ட இளந்தென்றல் திடுக்கிட்டாள். பின்னால் திரும்பி அவனை பார்த்த அவள், கட்டிலை விட்டு அவசரமாய் கீழே இறங்கினாள். மாமல்லனின் முக பாவமோ கல்லாய் சமைந்திருந்தது. அவனது திடீர் வருகையால் தடுமாறிப் போனாள் இளந்தென்றல். மதியம் தானே வருவேன் என்று கூறிவிட்டு சென்றான்? பிறகு ஏன் சீக்கிரம் வந்து விட்டான்? ஒருவேளை, அவனுக்கு உடல்நிலை மீண்டும் சரியில்லாமல் போய்விட்டதோ? அல்லது மிகவும் களைப்பாக இருந்திருப்பானோ? மாமல்லன் தன்னிடம் கேட்ட கேள்விக்கு பொருத்தமாய் என்ன பொய்யை கூறி சமாளிக்கலாம் என்று யோசித்தாள் இளந்தென்றல்.
"இல்ல... நான் எதையும் தேடல. இந்த பெட் ஷீட்டை மாத்தணுமான்னு பாத்துகிட்டு இருந்தேன்"
அறையின் உள்ளே வந்த மாமல்லன்,
"அப்படியா? தொலைஞ்சு போன உன்னோட கொலுசு கிடைச்சிடுச்சா?" என்றான். அவனது பார்வை, அவள் முகத்தில் ஆழமாய் பதிந்திருந்தது.
"இல்ல... இன்னும் கிடைக்கல" என்றாள், புன்னகையை வலிய வரவழைத்துக் கொண்டு.
தனது பாக்கெட்டிலிருந்த அவளது கொலுசை வெளியே எடுத்து, அதை அவளிடம் காட்டினான் மாமல்லன்.
"இது உங்க கிட்ட கிடைச்சிடுச்சா? நல்லதா போச்சு..."
அதை அவனிடமிருந்து பெற இரண்டு அடி முன்னே எடுத்து வைத்தாள். ஆனால், அவனது கையை பின்னால் இழுத்துக் கொண்டான் மாமல்லன். அது அவளை குழப்பியது. அவனது அடுத்த வார்த்தைகள் அவள் முகத்தின் பொலிவை வடிவ செய்தன.
"இது எனக்கு என்னோட பெட்ல கிடைச்சது" அவனது குத்திட்டுப் பார்வை அவளது இதயத்தை பிளந்தது.
தனக்கு ஏற்பட்ட சங்கடத்தை விழுங்க முயன்றாள் இளந்தென்றல்.
"நான் உங்களை கவனிச்சுகிட்டப்போ அது கழண்டு விழுந்திருக்கும்னு நினைக்கிறேன்" என்றாள் தாழ்ந்த பார்வையுடன்.
ŞİMDİ OKUDUĞUN
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️
Genel Kurguவாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள்...