13 உன்னத உணர்வு

1.1K 62 11
                                    

13 உன்னத உணர்வு

மாமல்லன் தந்த அதிர்ச்சியில்  இருந்து மீளவே இல்லை இளந்தென்றல். அன்று இரவு அவள் உணவருந்த வெளியே வரவில்லை. மாமல்லனும் அவளை தொந்தரவு செய்யவில்லை. அவள் தன்னை ஆசுவாசப்படுத்தி கொள்ளட்டும் என்று விட்டு விட்டான்.

இந்த சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தாள் இளந்தென்றல். அவளது மனதை பலவீனம் அடைய விட்டால், இந்த சூழ்நிலையை அவளால் சமாளிக்க முடியாது. அவளது மனதை நிலைப்படுத்தி நிறுத்திவிட்டால், இந்த பிரச்சனை ஒன்றும் பெரிதாய் தெரியாது. எனவே அவள் மனதை அமைதிப்படுத்த முயன்றாள். பல நேரங்களில், அமைதியான, ஆழ்ந்த தூக்கம், நிதானமான சிந்தனைக்கு வழி வகுக்கிறது. அதனால் எதைப் பற்றியும் யோசிக்காமல் நிம்மதியாய் உறங்கினாள்.

மறுநாள் காலை,

புத்துணர்ச்சியுடன் விருந்தினர் அறையை விட்டு வெளியே வந்தாள் இளந்தென்றல். அந்த சூழ்நிலையை சமாளிப்பதற்காக மட்டுமல்ல, தான் எவ்வளவு உறுதியானவள் என்பதை காட்டவும் தான். அந்த வீட்டில் இருந்த சிறிய பூஜை அறைக்கு சென்று, தன் வீட்டில் வழக்கமாய் செய்வது போல், பூஜை செய்ய தொடங்கினாள். தன் அம்மாவை காப்பாற்ற, இப்படிப்பட்ட வாய்ப்பை அளித்ததற்காக கடவுளுக்கு நன்றி கூறினாள்.

உறங்கிக் கொண்டிருந்த மாமல்லன், பூஜை மணியின் சத்தம் கேட்டு திடுக்கிட்டு கண் விழித்தான். அரை தூக்கத்தில் இருந்த அவனுக்கு, முதலில் ஒன்றுமே புரியவில்லை. தரைதளம் வந்தவன், அங்கு தென்றல் பூஜை செய்து கொண்டிருப்பதை பார்த்து அசந்து போனான். 

சோபாவில் சாய்ந்து கொண்டு புன்னகையுடன் நின்றான். பூஜையை முடித்துக் கொண்டு வெளியே வந்த தென்றல், அவனைப் பார்த்தும் பார்க்காதவளை போல் சென்றாள். அங்கே ஒருவன் நிற்பதாய் கூட அவள் காட்டிக் கொள்ளவில்லை. அவள் அப்படி தெனாவெட்டாய் செல்வதை பார்த்து புன்னகை புரிந்தான் மாமல்லன்.

"சாமி கும்பிட்டா, வீட்ல இருக்கிற மத்தவங்களுக்கும் பிரசாதம் கொடுக்கணும். நீ மட்டும் சாப்பிடக் கூடாது" என்றான்.

இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️Where stories live. Discover now