அழகான Coffee shop. Background இல் இனிமையான Music. அவன் மன நிலைக்குப் பொருத்தமாக இருந்தது அந்த சூழ்நிலை. ப்ரியா வரும் வரை காத்திருந்தான் அருண்.
அருணுக்கு வயது 26. ஒரு வருஷமா கல்யாணம் கல்யாணம் என்று கெஞ்சிப் பார்த்த தாத்தா நேற்று Strict ஆ Order போட்டுவிட்டார் அடுத்த 2 மாதத்திற்குள் கல்யாணம் பண்ணியே ஆகனும் என்று. அதற்கு மேல் தள்ளிப்போட தோண்றவில்லை அவனுக்கும். அதற்காகத்தான் அவளுக்காக காத்திருந்தான் அருண்.
ப்ரியாவை கொஞ்ச நாளாகத் தான் தெரியும் அவனுக்கு . MBA முடித்தவள், Intern ஆக அருண் Office இல் வந்து சேர்ந்தாள். கெட்டிக்காரி, எல்லோருடனும் நட்பாய் பழகுவாள். வந்த கொஞ்ச நாளிலேயே அருண் மனதில் இடம் பிடித்து விட்டாள். இன்று அவளிடம் தன் காதலை சொல்லப்போகிறான் . தாத்தா பெண் பார்க்க என்று தன்னை எங்காவது இழுத்துக் கொண்டுபோக முன் ப்ரியாவை அவர் முன்னால் நிறுத்த வேண்டும்.
Hi sir !
யோசனையில் இருந்தவன் முன் நின்று புன்னகை பூத்தாள் ப்ரியா. நல்ல நிறம், நல்ல உயரம் . Black jeans க்கு dark blue top போட்டு இருந்தாள் . அது அவளுக்கு அழகாக இருந்தது.
Hi priya!
பதிலுக்கு புன்னகைத்தவன் அவளை அமரச் சொன்னான்.
நானே Office வந்து உங்கள Meet பண்ணலாம்னு தான் இருந்தேன், அதுக்குள்ள நீங்களே meet பண்ண. வர சொல்லிட்டீங்க ...
Really.? நான்கூட Internship முடிஞ்சதும் எங்கள சுத்தமா மறந்து போச்சோன்னு நெனச்சேன்.
அய்யோ, அப்டில்லாம் இல்ல Sir. Visa, travel arrangements னு கொஞ்சம் Busy ஆகிட்டேன் . அதுதான் Contact பண்ணல.
Visa? But priya....
உங்களுக்கு தான் தெரியுமே, என் Brother, family யோட US ல இருக்கான். Next week நானும் அம்மாவும் US போறோம். எனக்கு அங்கயே Job உம் கெடச்சிடுச்சு.
....
Sir, என்னாச்சு??
ப்ரியா நான் இத இப்போ சொல்றது சரியான்னு தெரியல .. But இப்போ இல்லன்னா சொல்ல முடியாமயே போய்டும்.
ம்ம் ... சொல்லுங்க. ...
I ... love you Priya
....
sir எனக்கு வீட்ல Already....
.....
அவங்க Family யும் US ல தான் இருக்காங்க ... எனக்கு Next month கல்யாணம் ...
I'm... Sorry sir
It's ok Priya. Well ... Congrats!!
Thank you sir. .... நான் போய்ட்டு வரேன்.
ம்ம் Bye ...
அதற்கு மேல் எதுவும் பேசத் தோன்றவில்லை அவனுக்கு . அவள் போகும் திசையையே பார்த்துக்கொண்டிருந்தான் .