அடுத்த நாள் அனுவை கூட்டிவர கிளம்பும் போதே,
இன்னைக்கும் எங்கப்பா போற? Sundays ஆலும் வீட்டுல இருக்க மாட்டியா ?
ஒரு சின்ன Work தாத்தா, சீக்கிரம் வந்துடுவேன் ...
அருண், அனுவின் வீட்டை அடையவும் ஸ்வேதா வெளியே வரவும் சரியாக இருந்தது.
அவளை கண்டதும் "Hi " என்று கூறி புன்னகைத்தான் .
Hi அருண் அண்ணா, நல்லா இருக்கீங்களா ?
ம்ம், இருக்கேன். நீ எப்டி இருக்க.?)
நல்லா இருக்கேன். நாளைக்கி Office ல ஒரு Function. Arrangements கொஞ்சம் இருக்கு. அதான் கெளம்பிட்டேன். அனு Ready ஆகுறா. நீங்க உள்ள போங்க.
ஸ்வேதா அனுவின் மாமாவின் மூத்த மகள். அனுவை விட நான்கு மாதங்கள் இளையவள்.
அவள் கிளம்பியதும் அருண் வீட்டு வாசலில் நின்று Calling bellஐ அடித்தான்.
அனு தயாராகத்தான் இருந்தாள். ஆகவே தாமதிக்காமல் இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள்.
பழைய வீட்ட வித்துட்டீங்களா?
இல்ல அனு, விக்க மனசு வரல. இந்த Landல இருந்து Office ரொம்ப பக்கம், அதான் இங்கயே வீடு கட்டிட்டேன் .
ம்ம், பெரிய Gardenலாம் வெச்சிருக்க. வீடு ரொம்ப அழகா இருக்கு.
அனுவை பார்த்ததில் தாத்தாவுக்கும் ரொம்பவே சந்தோஷம்.
தேவி இறந்ததை பற்றி தாத்தாவிடம் அருண் ஏற்கனவே கூறியிருந்ததால், அவர் அனுவிடம் எதுவும் கேட்கவில்லை.
அனுவுக்கு பிடித்த மாதிரி Lunch. Order செய்திருந்தான்.பகல் மூவரும் சேர்ந்து சாப்பிட்டார்கள்.
Paint colours, Furniture எல்லாம் நீயே Select பண்ணதா? இந்த Paintings எங்க வாங்கின? இந்த Wall decors செம்மயா இருக்கு.
வீட்டில் ஒவ்வொரு விடயத்தையும் ரசித்துக் கொண்டே வந்தாள்.
"இது என் Bedroom " என்று தன் அறையை காட்டினான்.
அங்கே Books,albums என ஒவ்வொன்றாய் பார்த்தவள் கண்ணில் பட்டது அந்த Photo.
![](https://img.wattpad.com/cover/98446885-288-k86604.jpg)