அனுவை பற்றிய சிந்தனையில் வீட்டை அடைந்தவனிடம் தாத்தா அவன் திருமணம் பற்றிப் பேசி இன்னும் எரிச்சல் மூட்டினார். வீட்டில் இருப்புக்கொள்ளாமல் விக்னேஷை சந்திக்கக் கிளம்பினான் அருண்.
விக்னேஷின் வீட்டு வாசலில் நின்று horn அடிக்கவே திட்டிக்கொண்டே வந்தான் விக்கி.
சிந்துவ பத்தி ஏன்டா அனுகிட்ட சொன்ன.? அவ Phone பண்ணி உயிர வாங்கிட்டா. Treat வேணுமாம், சிந்துவ Meet பண்ணனுமாம். சிந்து ஊர்ல இல்லன்னு சொன்னா நம்ப மாட்டேங்குறா.
அவன் பேசிய எதுவும் சிந்தையில் ஏறாமல் "கார்ல ஏறு, கொஞ்சம் பேசனும் " என்றான் அருண்.
என்னாச்சு? எதாவது Problem ஆஹ்?
"ம்ம், சொல்றேன் " என்றவன் காரை எடுத்தான்.
Uncle அனுக்கு இப்பவே Marriage பண்ண Ready ஆகுறாரு. இவ கல்யாணம் வேணாம்னு ஒரே அழுக. தாத்தா வேற உயிர வாங்குறாருடா. என்ன பண்றதுன்னே தெரியல.
அனு கல்யாணத்துக்கு இப்ப என்னடா அவசரம்? அவளே ரொம்ப Disturbed ஆஹ் இருக்கா. அது சரி ,தாத்தா என்ன சொல்றாரு?
பொண்ணு பாக்க போக கூப்புட்றாரு.
அருண் Serious ஆக சொல்ல அவன் பரிதாபமான முகத்தை பார்க்க விக்னேஷிற்கு பாவமாய் இருந்தது.
"இருந்தாலும் ரொம்ப... நல்லவன்டா நீ. எவ்ளோ அடிச்சாலும் தாங்குற. " என்று விக்னேஷ் சொல்ல அவனை முறைத்தான் அருண்.
Sorry sorry, இப்ப என்ன பண்ண போற? நாம என்ன சொன்னாலும் தாத்தா Convince ஆக மாட்டாரு. So உன்னோட Problemகு No solution. வேணும்னா அனுவோட மாமாகிட்ட பேசிப்பாக்கலாம்.
அவர்கிட்ட நெறயவே பேசிப்பாத்துட்டேன். அவர் கேட்டா தானே.
இருவரும் மாறி மாறிப் பேசி களைத்துப்போனார்கள். தீர்வு எதுவும் கிடைக்கவில்லை.
![](https://img.wattpad.com/cover/98446885-288-k86604.jpg)