பகுதி 12

3.9K 153 16
                                    


Hello! அனு ... Night எதுக்கு Call பண்ண? Sorry நா கொஞ்சம் Busyஆஹ் இருந்தேன், Phone ring ஆனது .... கேக்கல.

It's ok அருண். நான் ஊருக்கே போய்டலாம்னு இருக்கேன். அத சொல்லத்தான் ...

ஊருக்கா??!! என்ன திடீர்னு ? ... அங்க போய் தனியா என்ன பண்ணுவ?

அவளிடம் இருந்து பதில் ஏதும் வரவில்லை. மெல்லியதாய் விம்மல் மட்டும் கேட்டது.

அனு, நாம Meet பண்ணி பேசலாம். Ready ஆ இரு, நான் வந்து கூட்டிட்டு போறேன்.

இல்ல, இப்போ Office time. நீ வர வேணாம்.

20 Minutes ல அங்க இருப்பேன். Ready ஆ இரு.

சொன்ன நேரத்தில் அங்கே போய் சேர்ந்தவன், அவளை கூட்டிக்கொண்டு கிளம்பினான்.

என்ன Problem??

"எனக்கு மாப்பிள்ள பாக்குறாங்க. சீக்கிரமா கல்யாணம் பண்ணி வெக்கப் போறாங்கலாம். " விம்மலுடன் சொன்னாள்.

எனக்கு கல்யாணம் பண்ணிக்கவே பிடிக்கல அருண். ஒரு மாதிரி வெறுப்பா இருக்கு.

இப்போதைக்கி கல்யாணம் வேணாம்னு வீட்ல சொல்லலாமே?

அதெல்லாம் சொல்லிட்டேன். மாமா கேட்டா தானே. இதுல அத்தையும் மாமாக்கு Support பன்றாங்க. நான் அவங்களோட பொறுப்பாம். எனக்கு நல்ல வாழ்க்க அமைச்சி குடுக்குறது அவங்க கடமையாம். எனக்கு Marriage பண்ணிட்டு தான் ஸ்வேதா Marriage பத்தி யோசிக்கனுமாம். அதனால Late பண்ண முடியாதாம்.

சரி, நான் Uncle கிட்ட பேசி பாக்குறேன்.

நானே நெறய பேசிட்டேன் அருண், அவங்க. Convince ஆகுற மாதிரி தெரியல.

எதாவது சொல்லி Convince பண்ணிடலாம். நீ அவர் Phone number கொடு. நா பேசுறேன்.

அவளை ஏதேதோ பேசி சமாதானப் படுத்தி வீட்டில் விட்டுவிட்டு Office போனான்.

அன்று மாலையே மாமாவை சந்தித்து பேசினான்.

ஆனால் மாமா தனது முடிவில் உறுதியாய் இருந்தார். அனு மூத்த பெண் அவளுக்கு முதலில் திருமணம் நடத்த வேண்டும் என்பது அவர் முடிவு. எவ்வளவு முயன்றும் அருணால் அவரை மாற்ற முடியவில்லை.

என் அன்புள்ள சிநேகிதிDonde viven las historias. Descúbrelo ahora