பகுதி 15

3.8K 142 6
                                    

அடுத்த நாள் காலையிலே விக்கி Phone செய்ய தனது முடிவை கூறினான் அருண்.

அதிர்ச்சியில் வாயடைத்துப் போய் நின்றவன் ஒருவாறு தன்னை சமாளித்துக் கொண்டு,

"டேய்!! எவ்ளோ பெரிய விஷயத்த இப்டி சாதாரணமா சொல்ற? நீ Idiot மாதிரி முடிவெடுத்தா அதுக்கு அந்த அனு லூசு வேற Support ஆஹ் " கோவமாய் கத்தினான்.

"இல்லடா எனக்கு வேற வழி தெரியல." வேறெதுவும் பேசாமல் போனை கட் செய்தான்.

முடிவை மாற்றிக்கொள்ள விரும்பாவிட்டாலும் அவன் மனதில் ஒரு உறுத்தல் தோன்றியது.

குளியலறைக்குப் போய் வழக்கத்திற்கும் அதிகமான நேரம் Shower இல் நின்று விட்டு, ஒருவாரு வெளியே வந்தான்.

போனில் 3 missed calls, விக்கி தான். மீண்டும் திட்டலை எதிர்பார்த்துக் கொண்டே அவனுக்கு போன் செய்தான்.

அருண் ...

ம்ம் ... சொல்லு.

இல்லடா, யோசிச்சுப் பாத்தேன். நீ சொன்னதும் சரின்னு தான் தோனுது.

ஹேய், உண்மையா தான் சொல்றியா?

ஆமாடா, தாத்தாகிட்ட சொல்லிட்டியா?

இன்னும் இல்ல, இன்னக்கி பேசலாம்னு தான் இருக்கேன்.

ஹ்ம், Ok பேசு நாம Evening meet பண்ணலாம் . Bye

Bye.

அதன்பின் Office போக தயாராகி அப்படியே கீழே வந்தான். அங்கே அருண் வரும்வரை காத்திருந்தார் தாத்தா. காலையில் இருவரும் சேர்ந்து சாப்பிடுவது தான் வழக்கம்.

Good morning தாத்தா

வாங்க Sir, இங்க ஒரு கிழவன் பசியோட காத்திருக்கானேன்ன நெனப்பு கொஞ்சமாவது இருக்கா இவ்ளோ Lateஆ வர்ரீங்க.? இதுக்கு தான் வீட்டுக்கு ஒரு பொண்ணு வேணும்டறது.

வழக்கம் போல அவர் வேலையை தொடங்கினார் தாத்தா.

Photos பாத்து Select பண்ணிட்டியா?

அது ... தாத்தா ... நா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்.

என்ன இன்னும் Time கேக்க போறியா? அதெல்லாம் முடியாது. நீ இன்னக்கி ஒரு முடிவு சொல்லியே ஆகணும்.

இல்ல தாத்தா. நா அனுவையே கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கேன் .

அனு? நம்ம அனுவா?

என்ன சொல்லப் போகிறாரோ என்ற படபடப்புடனே தலையாட்டினான் அருண் .







என் அன்புள்ள சிநேகிதிWhere stories live. Discover now