பகுதி 24

3.7K 141 13
                                    


பிறந்தநாள் கொண்டாட்டங்கள் முடிந்து அனைவரும் கிளம்பிய பின் நீண்ட நேரம் ஆகியும் அனுவை காணாமல் தேடிக்கொண்டு கீழே வந்தான் அருண். தாத்தா ஹாலில் TV பார்த்துக்கொண்டிருந்தார். சமையலறை பக்கம் போனவன் அங்கேயும் அவளை காணாமல் தோட்டத்திற்கு வந்தான். அங்கே புற்தரையில் அமர்ந்தபடி வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் அவள்.

அவளின் அருகில் போய் அமர்ந்தவன் ஆறுதலாய் அவள் கை பற்றி என்ன என்பது போல் அவள் முகம் பார்த்தான்.

இல்ல அருண் போன Birthday க்கு அம்மா கூட இருந்தாங்க அதான் ...

அவன் எதுவோ சொல்ல வாயெடுக்க" It's ok டா, வா போலாம் " அவனையும் அழைத்துக் கொண்டு வீட்டினுள் போனாள்.


அடுத்த வாரம் அனுவின் முதல் மாத சம்பளம் கிடைத்ததும் அனு, ஸ்வேதா, சுஜி மூவரும் Shopping கிளம்பினார்கள். மற்ற இருவருக்கும் பிடித்ததை அவர்களுக்கே தெரிவு செய்ய சொல்லிவிட்டு அருணுக்கு Shirt select பண்ண போனாள் அனு. நீண்ட நேரத் தேடலிலும் எதுவும் பிடிபடாமல் போகவே வெறும் கையுடன் திரும்பி வந்தாள். தமக்குரிய ஆடைகளை தெரிவு செய்துவிட்டு சுஜியும், ஸ்வேதாவும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

"பொண்ணுங்க எங்களுக்கே Dress select பண்ணிட்டோம். இவ்ளொ நேரத்துல ஒன்னால ஒரு Shirt Select பண்ண முடியலயா? " கேள்வியுடன் வரவேற்றாள் சுஜி.

இல்ல சுஜி Shirt அவனுக்கு புடிச்சமாதிரி இருக்கனும்ல.

"அப்போ நீ அருண் அண்ணாவ கூட்டிட்டு வந்திருக்கனும். " ஸ்வேதா சொல்ல "எனக்கு புடிச்சா அவனுக்கும் புடிக்கும். So அருண்க்கு Dress எடுக்க அனு வந்தாலே போதும் " கண்களை விரித்து தலையை ஆட்டிய படி பதில் சொன்னாள்.

"பின்ன, ரெண்டு பேரும் Made for each other ஆச்சே , அருண் அண்ணாக்கு என்ன புடிக்கும்னு அவரோட Better half க்கு தெரியாம போகுமா? " சுஜி சொல்லவும் "ஆமா சுஜி Childhood love னா சும்மாவா, " ஸ்வேதாவும் அவளுக்கு ஒத்து ஊதினாள்.

"விட்டா பேசிட்டே இருப்பீங்களே , வாங்க Bill pay பண்ணிட்டு வேற கடைக்கி போலாம் " மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல் அவர்களை இழுத்துக்கொண்டு கிளம்பினாள்.

அடுத்த கடையை புரட்டிப் போட்டு ஒருவழியாக Shirt தெரிவு செய்து விட்டு மூவரும் Icecream. சாப்பிடப் போனார்கள். Ice cream order கொடுத்து விட்டு அமர்ந்திருக்கும் போது விட்ட இடத்திலிருந்து சுஜி மீண்டும் தொடங்கினான்.

இருந்தாலும் பயங்கரமான ஆளு தான் அனு நீ, அருண் அண்ணாவ Love பண்ற விஷயத்த எங்ககிட்ட கூட சொல்லல.

"Love பண்ணா தானே சொல்ல முடியும்?, இன்னைக்கி பாத்து அக்காக்கும் தங்கச்சிக்கும் என்ன பத்தியே கேள்வியா வருது. " அனு Mind voice இல் புலம்பிக்கொண்டிருக்கும் போது நல்ல வேலையாக இவர்கள் Order செய்த Ice cream வந்துவிட., " சீக்கிரமா சாப்புடுங்க இருட்டறதுக்கு முன்ன போகனும் " கதையை மாற்றினாள்.

"இப்பதான்பா 5 O'clock. இன்னும் கொஞ்சம் மெதுவாவே சாப்ட்டு இருக்கலாம். "

"அது தான் ஒன்னுக்கு ரெண்டு Ice cream சாப்பிட்டியே. "

இவர்கள் கதைத்துக் கொண்டே வெளியில் வர, எதிரில் வந்த பெண்ணில் மோதினாள் அனு.

இவள் கையில் இருந்த Bag கீழே விழுந்து விட Sorry சொல்லிய படி அதை எடுத்து கொடுத்தாள் அந்த பெண் - ப்ரியா.

என் அன்புள்ள சிநேகிதிTempat cerita menjadi hidup. Temukan sekarang