இரவு பதினொறு மணி. ஹாலில் அமர்ந்த படி TV channelஐ மாற்றிக் கொண்டிருந்தான் அருண். ஒரு மணி நேரமாக அதை தான் செய்து கொண்டிருக்கிறான். அனு இல்லாமல் அறைப்பக்கம் போகவே பிடிக்கவில்லை.
நேற்று மாலை அவளை அழைத்து வரப் போனான். "எங்கள மீறி எப்படி அனுவ கூட்டிட்டு போறேன்னு பாக்குறோம் " மல்லுக்கு நின்றார்கள் சுஜியும் ஸ்வேதாவும்." கல்யாணத்துக்கு ஒரு வாரம் தான் இருக்கு அருண்" சிணுங்கிக் கொண்டு சொன்னாள் அனு.
ஹேய் நாளைக்கி Monday ஒனக்கு School இருக்கே!
அதெல்லாம் நா இங்க இருந்தே போயிப்பேன். சுஜி என்ன Drop பண்ணி அவளே Pick up பண்ணிப்பா .
அப்போ Weekend தங்கிட்டு வந்துடுவேன்னு சொன்ன?!!
நான் எப்போ சொன்னேன்? நீயா தான் அப்டி நெனச்சிக்கிட்ட.
அருணே வந்து கூப்பிடுவதால் அனுவை அனுப்புவது தான் சரி என்று புத்தி சொன்னாலும், வீட்டுக்கு வந்த பெண்ணை போ என்று சொல்ல மனது வராமல் " அவ இங்க இருக்கட்டும் தம்பி, ஒரு வாரம் தானே " என்று சுதாவும் சொல்ல அதற்கு மேலே எதுவும் பேச முடியவில்லை அருணால்.
பாவி! School இல்ல So ரெண்டு நாள் இருந்துட்டு வரட்டும்னு நெனச்சா, அவ பத்து நாள் அங்கயே தங்க Plan போட்ருக்கா. இதுல அங்கருந்தே School வேற போறா. ஆளுக்கு பெரிய Bag தூக்கிட்டு போறப்பவே நான் alert ஆகி இருக்கணும். ரெண்டு நாளுக்கு எதுக்கு இவ்ளோ Dress கொண்டு போறன்னு அப்பவே புடிச்சி வெச்சிருக்கணும். எங்க போவ? எல்லாம் முடிஞ்சதும் வீட்டுக்கு தானே வருவ! அப்போ இருக்கு ஒனக்கு.
மனதுக்குள்ளேயே கரைத்துக் கொட்டினான் அவளை. வேறு என்னதான் செய்ய முடியும் அவனால்? அவள் வீட்டிலிருந்தால் அவளுடன் சண்டை போடலாம். மாமா வீட்டில் இருந்து கொண்டு "Office முடிஞ்சி வந்துட்டியா அருண்? சாப்டியா அருண்? தாத்தாவோட Tablets எல்லாம் வாங்கிட்டியா அருண் " என்று phone பண்ணி கேட்கும் போது சண்டை போட மனது வருவதில்லையே. ஏன் இந்தக் கோபம் கூட எங்கே போய்த் தொலைகிறதோ தெரியவில்லை.