நள்ளிரவு 12 மணி, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை தட்டி எழுப்பினான் அருண்.
"அதுக்குள்ள விடிஞ்சிருச்சா? " தூக்கக் கலக்கத்தில் கேட்டவளிடம்
"HAPPY BIRTHDAY!!! " அருண் உற்சாகமாய் கூற "ஓஹ் அப்டியா?" கேட்டுவிட்டு திரும்பிப் படுத்தாள்.
"வா, Cake cut பண்ணலாம் "
"ம்ம்ம்....."
"எழுந்திரிடீ சோம்பேறி " இம்முறை அவளை லேசாக உலுக்க எழுந்து உற்கார்ந்தாள்.
அழகாக Icing செய்யப்பட்டு ஒற்றை மெழுகுவர்த்தி ஏற்றிய Cake ஐ அவள் முன் நீட்ட, அவள் முகம் அழகாய் மலர்ந்தது. "Thanks அருண்" அவளுக்கே உரிய பாணியில் தலையை கொஞ்சம் சரித்து புன்னகை செய்தாள்.
ம்ம் Cut பண்ணு.
அதை அவள் அவனுக்கு ஊட்டப் போக, "முதல்ல Birthday girl நீ சாப்டு "அருண் அவளுக்கே ஊட்டினான். " இருவரும் பேசி சிரித்த படியே கேக் சாப்பிட்டு முடித்தனர். அருணின் தோளில் சாய்ந்த படியே அனு உறங்கிவிட அவளை சரியாக படுக்க வைத்துவிட்டு தானும் கட்டிலில் போய் படுத்தான்.
அருண் அவர்கள் வீட்டிலேயே Birthday party க்கு ஏற்பாடு செய்திருந்தான். ஞாயிறு தினமாகையால் ஸ்வேதாவும் சுஜியும் காலையே வந்துவிட்டார்கள். இவர்களின் கூட்டணியில் கேலியும் கிண்டலுமாய் வீடே நிறைந்திருந்தது.
அடுத்ததாக விக்கியும் சிந்துவும் வந்தார்கள். வந்தவர்கள் சிந்துவின் வீட்டில் அவர்களின் காதலுக்கு சம்மதம் கொடுத்துவிட்டதை சொல்ல, ஏற்கனவே கலகலப்பாய் இருந்த சூழ்நிலை இன்னும் அதிகமாய் கலை கட்டியது. இவர்களின் காதல் விக்கியின் வீட்டினர்க்கு ஏற்கனவே தெரியும். ஆனால் சிந்து தான் வீட்டில் பேச பயந்து கொண்டிருந்தாள். அவள் College நாட்களில் இருந்தே Hostelஇல் தங்கி இருந்ததால் இவர்கள் விஷயம் சிந்து வீட்டிற்கு தெரியாமலே இருந்தது. இப்போது அவள் ஒருவாரு பேசி, அதற்கு வீட்டினரின் அனுமதியும் கிடைத்து விட இருவருமே கல்யாணக் கனவில் இருந்தனர்.